ஐயோ… முன்பகையா?… சதியா?… மசூதிக்குள் இமாம் படுகொலை… கதறிய குடும்பம்… பீகாரில் நள்ளிரவில் நடந்த கொடூரம்…!

Spread the love

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள அர்னா கிராமத்து மசூதிக்குள் 50 வயதான முகமது ஷபிக் என்ற இமாம் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் போரே காவல் எல்லைக்கு உட்பட்ட சிசாய் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், நீண்ட காலமாக இந்த மசூதியில் இமாமாகப் பணியாற்றி வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. திங்கள்கிழமை நள்ளிரவில் மசூதி வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர் இவரைத் தாக்கியதில், பலத்த காயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து ஹதுவா துணைக் கோட்ட காவல் அதிகாரி ஆனந்த் மோகன் குப்தா தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலையாளியை அடையாளம் காணவும், குற்றத்திற்கான காரணத்தைக் கண்டறியவும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கிருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாரேனும் நடமாடினார்களா என்பது குறித்து உள்ளூர்வாசிகளிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இமாம் முகமது ஷபிக்கிற்கு யாரேனும் எதிரிகள் அல்லது முன்பகை இருந்ததா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை கொலையாளி யார், இதற்கான காரணம் என்ன என்பது தெளிவாகத் தெரியாத நிலையில், தலைமறைவாக உள்ள குற்றவாளியைப் பிடிக்க காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Swetha

Recent Posts

அம்மாடியோ… விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில்… 15.59 மீட்டருக்கு உருவான விசித்திர உருவம்… ஷாக்கில் உறைந்த பக்தர்கள்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…

1 மணத்தியாலம் ago

“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…

2 மணத்தியாலங்கள் ago

எந்த ஆதாரமும் இல்லாம… என் பேர கெடுக்குறாங்க… திஷா சாலியன் வழக்கில்… ஆதித்ய தாக்கரே ஆவேசம்… இணையத்தில் வைரல் பதிவு…!

திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…

2 மணத்தியாலங்கள் ago

“காதலியை பார்க்க சென்று…” சடலத்தை போட்டோ எடுத்து அனுப்பிய 16 வயது சிறுமி…. வாலிபர் இறப்பில் நீடிக்கும் மர்மம்… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… ரூமுக்குள்ள என்ன ஆச்சு?… லாட்ஜில் 23 வயது இளம்பெண் மர்ம மரணம்… கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…

2 மணத்தியாலங்கள் ago

“நானும் தப்பு பண்ணேன்… நீயும் தப்பு பண்ண…” இன்ஸ்டாகிராமில் கடைசி வீடியோ போட்டுவிட்டு தூக்கில் தொங்கிய 25 வயது பெண்… மெசேஜ் பார்த்து பதறிய தங்கை… பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…

2 மணத்தியாலங்கள் ago