Categories: சினிமா

பார்க்க முடியாததால் இறைவன் இல்லை என்று அர்த்தமா?… இசைஞானி சொன்ன எளிமையான விளக்கம்!

Spread the love

சினிமாவில் இன்னும் ஒரு வருடத்தில் தன்னுடைய 50 ஆவது ஆண்டை தொடப் போகிறார் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது  வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. இளையராஜா 76 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படம் மூலம் அறிமுகமான நிலையில் ஐந்தே ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நம்பர் 1 இசையமைப்பாளராக ஆனார்.

ilaiyaraaja with his brothers

அதன் பிறகு மிடாஸ் மன்னன் போல அவர் தொட்டதெல்லாம் தங்கமாக மாறின. அந்தளவுக்கு அவர் பாடல்கள் அடுத்த சில தசாப்தங்களுக்கு தமிழர்களை மயக்கியது. அதன் பின்னர் 1992 ஆம் ஆண்டு ரஹ்மானின் வருகைதான் அதன் பிறகு தமிழ் சினிமா இசையின் போக்கை மாற்றியது. ரஹ்மானின் வருகைக்கு முன்னர் வரை இளையராஜா அப்போதைய தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னன் என்றால் அது மிகையில்லை.

இளையராஜா தன்னுடைய சினிமா வாழ்வின் தொடக்க காலத்தில் நவநாகரீகமான உடையோடு பக்கா ஸ்டைலாக வலம் வருவார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் திடீரென ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொள்ள ஆரம்பித்தார். தன்னுடைய வாழ்க்கை முறையையே –உடைகளில் இருந்து உணவுப் பழக்கம் வரை- மாற்றிக் கொண்டார். அப்போது முதல் அவர் பாதி துறவி போலவே தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

ilaiyaraaja at temple

இந்நிலையில் இறைநம்பிக்கை குறித்த கேள்விக்கு அவர் தன்னுடைய புத்தகமான நாத வெளியினிலேவில் எளிமையான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் “என்னைப் பெற்றவர்களை எனக்குத் தெரியும். அவர்களின் பெற்றோர்களான தாத்தா பாட்டியை எனக்குத் தெரியும். ஆனால் அவர்களைப் பெற்ற முன்னோர்களைத் தெரியாது. அவர்களைத் தெரியாது என்பதற்காக அவர்கள் இல்லை என்று எப்படி சொல்ல முடியாதோ, அதுபோல இறைவன் நாம் பார்ப்பதற்கு ஏற்றவாறு நமக்குத் தோற்றம் அளிக்கவில்லை என்பதால் இல்லையென்று சொல்வது அறிவுடைமை ஆகாது” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

3 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

3 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

3 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

4 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

4 மணத்தியாலங்கள் ago