மன அழுத்தம் அதிகமாக இருக்கிறதா…? உங்களது Happy Hormones- ஐ மேம்படுத்தும் இந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கோங்க…

Spread the love

இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் யாருக்கு தான் இல்லை. யாரை கேட்டாலும் டென்ஷன் என்று தான் கூறுவார்கள். ஏதோ ஒரு பரபரப்பு இன்றைய வாழ்க்கை முறையில் குடிகொண்டிருக்கிறது. பணம் சேர்க்க வேண்டும் என்ற ஓட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் மன அழுத்தத்திற்கு மக்கள் ஆளாகிறார்கள். வெளியில் பலர் சொல்வதில்லை. ஆனால் இந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கு நம்மை நாமே ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும். தியானம் உடற்பயிற்சி போன்றவற்றை செய்யலாம். ஆனால் அதையும் தாண்டி ஒரு சில பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணும் பொழுது அது நம் உடம்பில் இருக்கும் மகிழ்ச்சியான ஹார்மோன்ஸ் எனப்படும் Happy Hormones – மேம்படுத்தும். இதனால் மன அழுத்தம் டென்ஷன் குறையும் என்று கூறுகிறார்கள். அதைப் பற்றி இனி காண்போம்.

இந்த Happy Hormones அதிகரிக்கும் போது நாம் மன அழுத்தம் இல்லாமல் டென்ஷன் இல்லாமலும் இருக்கலாம். நம் மனதில் உள்ள பதற்றமும் அழுத்தமும் விலக மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்திருக்க செரடோனின் ஹார்மோனை அதிகரிக்க உதவும் ட்ரிப்டோன் எனும் அமினோ அமிலம் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒரு ஆய்வின் மூலம் இந்த உண்மையை வெளிக்கொண்டு வந்து இருக்கிறார்கள்.

பிரிட்டனில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 18 முதல் 60 வயதுக்குட்பட்ட 5000 பேர் பங்கேற்றனர். ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவர்களின் மன ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் மனநிலையை மேம்படுத்த வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார்கள். ப்படி மன அழுத்தத்தை விரட்டும் பழங்கள் என்னவென்றால் வாழைப்பழம், ப்ளூபெர்ரி. இந்த வாழைப்பழத்தில் டிரிப்டோபன் மற்றும் வைட்டமின் B6 இருக்கிறது. ப்ளூபெர்ரியில் ஆன்டி ஆக்ஸிடென்ஸில் நிறைந்து இருக்கிறது. இது தவிர ஆரஞ்சு, இதில் வைட்டமின் சி ஊட்டச்சத்து நிறைந்தது. இது மட்டுமில்லாமல் அன்னாசி, சாத்துக்குடி ஆகிய பங்களும் மனதை அமைதிப்படுத்துகிறது.

காய்கறிகளில் பார்க்க போனால் கீரை, இதில் போலேட் மற்றும் இரும்புச்சத்து இருக்கிறது. அடுத்து பிரக்கோலி, இதில் செலபோரோபன் மற்றும் தனிமம் இருக்கிறது. இது மன அழுத்தத்தை குறைக்கிறது. அடுத்தது கேரட் இதில் பீட்டா கரோட்டின் இருக்கிறது. இது மூளையை relax ஆக உதவுகிறது. எப்போதாவது ஒரு சில நாட்கள் மிகவும் மன அழுத்தமாக உணர்கிறீர்கள் என்றால் இந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உடனே வாங்கி உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களது ஹேப்பி ஹார்மோன்சை தூண்டி மன அழுத்தத்தில் இருந்து விடுபட செய்யும்.

admin

Recent Posts

த.வெ.க ஆட்சிக்கு கம்யூனிஸ்ட் ஆதரவு தொடரும்…! – பெ. சண்முகம் அதிரடி பேட்டி… தமிழக அரசியலில் பரபரப்பு…!!

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தமிழக அரசியல் சூழல் குறித்துப் பல்வேறு…

14 minutes ago

BREAKING: மேலும் 5 MLA-க்கள் ராஜினாமா…! தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!!

அதிமுகவில் மேலும் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய…

27 minutes ago

“தவெக அமைச்சரவையில் மாற்றம்”…. ஜூனியர்களுக்கு கல்தா?… விஜய் கையில் எடுத்த ‘ஆபரேஷன் சீனியர்ஸ்’…. பதறவைக்கும் கோட்டை வட்டார ரகசியங்கள்….!

தமிழக அரசியல் களம் தற்போது இடைத்தேர்தல் மோடிற்குள் நுழைந்துள்ள நிலையில், கோட்டை வட்டாரங்களில் அமைச்சரவை மாற்றம் குறித்த விவாதங்கள் அனல்…

37 minutes ago

“வரலாற்றில் முதல்முறை… சிபாரிசு, பணம் இல்லாமல் நடந்த 215 அதிகாரிகள் டிரான்ஸ்பர்”…. தமிழக பத்திரப்பதிவு துறையில் அதிரடி மாற்றம்….!

தமிழக பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவிற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக, முற்றிலும் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் 215…

45 minutes ago

தவெகவில் இணைந்த 6 முன்னாள் அதிமுக MLA-க்கள்…. இத்தனை கோடி சொத்தா?…. வாயடைத்துப்போன அரசியல் களம்….!

அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள 6 முன்னாள் எம்.எல்.ஏ-க்களின் சொத்து விவரங்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக…

54 minutes ago

தமிழக பெண்களுக்கு ஷாக் நியூஸ்…. ரேஷன் கார்டில் தவெக அரசு செய்யப்போகும் அதிரடி மாற்றம்… இனி ‘இவர்களுக்கு’ மகளிர் உரிமைத் தொகை கிடையாது….?

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்', தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத்…

1 மணத்தியாலம் ago