இயக்குநர் பாரதிராஜாவிடம் கடலோர கவிதைகள், முதல் மரியாதை படங்களில் ஒளிப்பதிவாளராக பணிசெய்தவர் இளவரசு. பிறகு பாஞ்சாலங்குறிச்சி படத்தில், மகாநதி சங்கருக்கு பின்னணி குரலாக ஒலித்திருப்பார். பிறகு காமெடி நடிகராக, குணச்சித்திர நடிகராக தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தில் இருக்கிறார். முத்துக்கு முத்தாக, லிங்கா, களவாணி, இம்சை அரசன் 23ம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள் என பல படங்களில் இளவரசு நடிப்பு பிரமாதமாக இருந்தது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து இளவரசு கூறியதாவது, மீடியாக்களுக்கு இது ஒரு புது வியாபாரமாக இருக்கிறது. விஜய் அரசியலுக்கு வரட்டும், அல்லது வராமல் கூட போகட்டும். அதைப்பற்றி அவர்தான் சிந்திக்க வேண்டும், செயல்பட வேண்டும். அதைப்பற்றி மற்றவர்கள் பேச வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. ரஜினி வருவாரா, மாட்டாரா என்றனர். அவர் வரவில்லை. கமல் வந்துவிட்டார். உதயநிதி வந்து அமைச்சராகி விட்டார்.
இப்படி அடுத்து விஜய் வருவாரா, மாட்டாரா என்பதை ஒரு பெரிய விஷயமாக்கி, பரபரப்பாக்கி மீடியாக்களில், சமூக வலைதளங்களில் பேசிக்கொண்டு இருக்கின்றனர். ஒரு நடிகர் அரசியலுக்கு வருவது, தேர்தலில் ஜெயிப்பது, தோற்பது எல்லாம் அவர் பார்த்துக்கொள்ள வேண்டிய விஷயம். இதை கண்டென்ட் ஆக்கி பேச வேண்டிய அவசியமே இல்லை. அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் தவிர்ப்பதுதான் நாகரிகம். என்னை பொருத்தவரை விஜய் சினிமாவில் இருந்தால், ஆண்டுக்கு ரூ. 300 கோடி, ரூ. 400 கோடி தொழில், வியாபாரம் நடக்கும். விஜய் அரசியலுக்கு போனால் 400 கோடி ரூபாய் சினிமாத்துறைக்கு நஷ்டம் ஏற்படும். இதை ஒரு டெக்னீஷியனாக சொல்கிறேன், என்று இளவரசு கூறியிருக்கிறார்.
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள மூத்த அரசியல்வாதி கே.ஏ.…
மகாராஷ்டிர மாநில அமைச்சர் சஞ்சய் சிர்சாத், சத்ரபதி சம்பாஜிநகர் மாநகராட்சி அலுவலகம் தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துக்கள் மாநில அரசியலில் பெரும்…
தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.…
தமிழக அரசியல் வரலாறு 1967-ல் காங்கிரஸின் வீழ்ச்சிக்குப் பிறகு அண்ணா தலைமையிலான திமுக மற்றும் எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக என…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியும், அதன் விளைவாக ஏற்படக்கூடிய ஆபத்துகளும் உலகளாவிய விவாதப்பொருளாக மாறியுள்ளன. ஜெமினி, சாட்ஜிபிடி,…
ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளுக்குப் பிறகு அடுத்தடுத்து இரு வெற்றிகளைப் பெற்று மீண்டு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு…