விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது பரபரப்பாகவும் , விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது இன்றுடன் 51 நாட்களை நிறைவு செய்துள்ளது. இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள், 5 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் என 23 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் தற்பொழுது வரை 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இறுதியாக வைல்ட் கார்டு என்ட்ரியான கானா பாலா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இதை தொடர்ந்து, இந்த வாரத்தின் தலைவராக கடந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டின் தலைவராக இருந்த தினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு நாளும் சண்டைக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியின் இன்றைய நாளின் முதல் ப்ரோமோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதன்படி இன்றைய நாளின் ப்ரோமோவில் பிக் பாஸ் இல்லத்தில் பெரும் பூகம்பம் என்று பிக் பாஸ் கூறுகிறார். 14 போட்டியாளர்களுக்கும் பிக் பாஸ் இந்த ப்ரோமோவில் சவால் விடுகிறார். கடுமையான போட்டிகளால் பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ் ஆட்டம் காண போகின்றனர் என்றும், மேலும் அதிரடியாக மூன்று வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே வரப்போவதாகவும், இந்த புரோமோவில் கூறப்பட்டுள்ளது.
வென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடரலாம். தோற்றால் வைல்ட் கார்டு போட்டியாளர்களுக்கு வழிவிட்டு வெளியேற வேண்டும் என்று கூறப்படுகிறது. தற்பொழுது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு மூன்று போட்டியாளர்கள் வெளியேறுவார்களா? 3 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே வருவார்களா? இப்படி கேள்வி எழுப்பி இந்த ப்ரோமோ ஆனது ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறச் செய்துள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…