Connect with us

Tamizhanmedia.net

பிக் பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக என்ட்ரி கொடுக்கும் 3 வைல்ட் கார்டு போட்டியாளர்கள்… ஆட்டம் காணப்போகும் ஹவுஸ்மேட்ஸ்…

CINEMA

பிக் பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக என்ட்ரி கொடுக்கும் 3 வைல்ட் கார்டு போட்டியாளர்கள்… ஆட்டம் காணப்போகும் ஹவுஸ்மேட்ஸ்…

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது பரபரப்பாகவும் , விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது இன்றுடன் 51 நாட்களை நிறைவு செய்துள்ளது. இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள், 5 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் என 23 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் தற்பொழுது வரை 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

 

   

இறுதியாக வைல்ட் கார்டு என்ட்ரியான கானா பாலா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இதை தொடர்ந்து, இந்த வாரத்தின் தலைவராக கடந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டின் தலைவராக இருந்த தினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு நாளும்  சண்டைக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியின் இன்றைய நாளின் முதல் ப்ரோமோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

ALSO READ  பிக் பாஸ் வீட்டின் அடுத்த கேப்டன் யார்...? Captain Task-இல் முட்டி மோதிய நிக்சன் , தினேஷ்... வெளியான பரபரப்பு ப்ரோமோ...

அதன்படி இன்றைய நாளின் ப்ரோமோவில் பிக் பாஸ் இல்லத்தில் பெரும் பூகம்பம் என்று பிக் பாஸ் கூறுகிறார். 14 போட்டியாளர்களுக்கும் பிக் பாஸ் இந்த ப்ரோமோவில் சவால் விடுகிறார். கடுமையான போட்டிகளால் பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ் ஆட்டம் காண போகின்றனர் என்றும்,  மேலும் அதிரடியாக மூன்று வைல்ட் கார்டு  போட்டியாளர்கள் உள்ளே வரப்போவதாகவும், இந்த புரோமோவில் கூறப்பட்டுள்ளது.

வென்றால் பிக் பாஸ்  நிகழ்ச்சியை தொடரலாம். தோற்றால் வைல்ட் கார்டு போட்டியாளர்களுக்கு வழிவிட்டு வெளியேற வேண்டும் என்று கூறப்படுகிறது. தற்பொழுது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு மூன்று போட்டியாளர்கள் வெளியேறுவார்களா? 3 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே வருவார்களா? இப்படி கேள்வி எழுப்பி இந்த ப்ரோமோ ஆனது ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறச்  செய்துள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ…

ALSO READ  பிக் பாஸிலிருந்து வெளியே வந்தவுடன் ஜோவிகா சந்தித்த முதல் பிக் பாஸ் போட்டியாளர் இவர்தான்... ரெண்டு பேரும் இவ்ளோ நெருக்கமா..?

More in CINEMA

To Top