
CINEMA
என்னது Rolls Royce கார் வரதட்சணையா…? நகைக்கடையே வந்து இறங்குன மாதிரி இருக்கே… மணப்பெண் கோலத்தில் ஜொலிக்கும் நடிகை ராதாவின் மகள் (வீடியோ)…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ராதா. இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . 80’ஸ் 90’ஸ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை ராதா. ஆனால் இவரைப்போல இவரது மகள்களால் திரையுலகில் சாதிக்க முடியவில்லை என்றே கூறலாம்.
இவர் 1991ல் ஹோட்டல் அதிபர் ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கார்த்திகா மற்றும் துளசி ஆகிய இரண்டு மகள்களும் விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர். இவருடைய மகள்கள் கார்த்திகா மற்றும் துளசி இருவரும் நடிகையாக அறிமுகமானார்கள். ஆனால் இருவருக்குமே எதிர்பார்த்து அளவிற்க்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை.
நடிகை கார்த்திகா நாயர் கோ, அன்னக்கொடி, புறம்போக்கு என்கின்ற பொதுவுடமை போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவர் நடித்த முதல் திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதன் பிறகு தொடர் தோல்விகள் கண்டதால் பட வாய்ப்புகள் கிடைக்காமல் சுருங்கியது. ஒரு கட்டத்தில் சீரியல் தொடர்களிலும் தன்னை வெளிக்காட்டினார். இந்நிலையில் கார்த்திகா கடந்த சில வருடங்களாக தன்னுடைய நண்பர் ரோஹித் மேனன் காதலித்து வந்தார்.
அவருடன் ஒரு மாதத்திற்கு முன்பு நிச்சயதார்தம் நடந்து முடிந்தது. அதன் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகியது. இந்நிலையில் நேற்று கார்த்திகா நாயர் மற்றும் ரோஹித் மேனன் திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. அதில் தமிழ், தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் அதிகம் பேர் பங்கேற்று இருக்கின்றனர். தற்பொழுது அவர் திருமண கோலத்தில் Rolls – Royce காரில் இருந்து மாஸாக வந்திறங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…