
CINEMA
21 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்க கானா பாலா வாங்கிய சம்பளம்.. சும்மா இருந்ததுக்கு இத்தன லட்சமா..?
விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்புக்கு அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்டது. இன்றுடன் 51 நாட்களை நிறைவு செய்துள்ளது. இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களை தொடர்ந்து 5 வைல்ட் கார்டு போட்டியாளர்களும் களமிறங்கினர். தற்பொழுது கடந்த வாரம் வரை பிக் பாஸ் வீட்டை விட்டு 8 போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர்.
இவர்களில் இறுதியாக கடந்த வாரம் ஐஸு பிக் பாஸ் வீட்டை விட்டு குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறினார். நாளுக்கு நாள் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல், இந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது. இதை தொடர்ந்து வார இறுதியான நேற்று கானா பாலா மக்களிடம் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறினார். கடந்த சீசன்களோடு ஒப்பிடும்போது பாதி நிகழ்ச்சி முடிந்த நிலையில் மக்கள் ஓரளவு இவர் தான் வெற்றியாளர் என கணித்து விட்டனர்.
ஆனால் இந்த சீசனில் அப்படி ஒரு கணிப்பு யாருக்குமே வரவில்லை. ஏனெனில் யாரை ஆதரிப்பது? யாரை வெறுப்பது? என்று இதுவரைக்கும் மக்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது வித்தியாசமான முகத்தை காட்டி வருகின்றனர். அதன்படி இந்த வாரம் வீட்டில் தலைவராக வைல்ட் காட் போட்டியாளரான தினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தற்பொழுது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர் கானா பாலா பிக் பாஸ் வீட்டில் இருக்க எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி ஒரு நாளைக்கு ரூபாய் 25 ஆயிரம் வரை சம்பளமாக பேசப்பட்டதாம். அந்த வகையில் பார்த்தால் 21 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த கானா பாலாவிற்கு 5 லட்சத்தி 25 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் ‘சும்மா இருந்ததுக்கு இத்தனை லட்சம் சம்பளமா ? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.