
CINEMA
நடிகர் விஜய் இல்லனா எங்களுக்கு 400 கோடி நஷ்டம்.. பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் இளவரசு.. அதிர்ச்சியளிக்கும் தகவல்..
இயக்குநர் பாரதிராஜாவிடம் கடலோர கவிதைகள், முதல் மரியாதை படங்களில் ஒளிப்பதிவாளராக பணிசெய்தவர் இளவரசு. பிறகு பாஞ்சாலங்குறிச்சி படத்தில், மகாநதி சங்கருக்கு பின்னணி குரலாக ஒலித்திருப்பார். பிறகு காமெடி நடிகராக, குணச்சித்திர நடிகராக தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தில் இருக்கிறார். முத்துக்கு முத்தாக, லிங்கா, களவாணி, இம்சை அரசன் 23ம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள் என பல படங்களில் இளவரசு நடிப்பு பிரமாதமாக இருந்தது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து இளவரசு கூறியதாவது, மீடியாக்களுக்கு இது ஒரு புது வியாபாரமாக இருக்கிறது. விஜய் அரசியலுக்கு வரட்டும், அல்லது வராமல் கூட போகட்டும். அதைப்பற்றி அவர்தான் சிந்திக்க வேண்டும், செயல்பட வேண்டும். அதைப்பற்றி மற்றவர்கள் பேச வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. ரஜினி வருவாரா, மாட்டாரா என்றனர். அவர் வரவில்லை. கமல் வந்துவிட்டார். உதயநிதி வந்து அமைச்சராகி விட்டார்.
இப்படி அடுத்து விஜய் வருவாரா, மாட்டாரா என்பதை ஒரு பெரிய விஷயமாக்கி, பரபரப்பாக்கி மீடியாக்களில், சமூக வலைதளங்களில் பேசிக்கொண்டு இருக்கின்றனர். ஒரு நடிகர் அரசியலுக்கு வருவது, தேர்தலில் ஜெயிப்பது, தோற்பது எல்லாம் அவர் பார்த்துக்கொள்ள வேண்டிய விஷயம். இதை கண்டென்ட் ஆக்கி பேச வேண்டிய அவசியமே இல்லை. அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் தவிர்ப்பதுதான் நாகரிகம். என்னை பொருத்தவரை விஜய் சினிமாவில் இருந்தால், ஆண்டுக்கு ரூ. 300 கோடி, ரூ. 400 கோடி தொழில், வியாபாரம் நடக்கும். விஜய் அரசியலுக்கு போனால் 400 கோடி ரூபாய் சினிமாத்துறைக்கு நஷ்டம் ஏற்படும். இதை ஒரு டெக்னீஷியனாக சொல்கிறேன், என்று இளவரசு கூறியிருக்கிறார்.