Connect with us

கமலுடன் ஒருதலை காதல்.. சாகும் தருவாயில் தன் காதலனை கடைசியாக பார்க்க ஆசைப்பட்ட ஸ்ரீவித்யா.. இறுதியில் கலங்கி நின்ற கமல்..

CINEMA

கமலுடன் ஒருதலை காதல்.. சாகும் தருவாயில் தன் காதலனை கடைசியாக பார்க்க ஆசைப்பட்ட ஸ்ரீவித்யா.. இறுதியில் கலங்கி நின்ற கமல்..

நடிகை ஸ்ரீவித்யா, கருப்பு வெள்ளை படங்களில் கதாநாயகியாக நடித்து, பின் பிற்காலத்தில் ஹீரோ, ஹீரோயின்களுக்கு அம்மாவாக நடித்தவர். காதலுக்கு மரியாதை, ஆனந்தம், சங்கமம் போன்ற படங்களில் அம்மாவாக ரசிகர்களின் மனதில் நின்றவர். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முதல் கதாநாயகி இவர்தான். ரஜினி அறிமுகமான அபூர்வ ராகங்கள் படத்தில், ரஜினிக்கு ஜோடி ஸ்ரீவித்யா தான்.

Kamal Haasan
தமிழ் சினிமாவில் ஸ்ரீவித்யா நடித்த அந்த சமயத்தில் உணர்ச்சிகள், அன்னை வேளாங்கண்ணி படங்களில் கமலுடன் நடித்த காலகட்டத்தில், கமல் மீது தீராத காதல் கொண்டு இருக்கிறார். ஆனால் கமலை விட வயதில் மூத்தவர் என்பதால் ஸ்ரீவித்யா காதல் கனவு திருமணத்தில் முடியவில்லை. அந்த நேரத்தில் வாணி கணபதியை கமல் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். கமல் மீது காதல் கொண்ட ஸ்ரீ வித்யா, இந்த சம்பவத்தால் மனம் நொறுங்கிப் போனார் என்றாலும், சினிமாவில் தொடர்ந்து நடித்தார்.பல ஆண்டுகளுக்கு பிறகு அபூர்வ சகோதரர்கள் படத்தில் அப்பா கமலுக்கு ஜோடியாகவும், இரண்டு மகன்(கமல்)களுக்கு தாயாகவும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

   

Kamal Haasan

   

இந்நிலையில், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு, கேரளாவில் சாகும் தருவாயில் இருந்த நடிகை ஸ்ரீவித்யா, கடைசி ஆசையாக பார்க்க ஆசைப்பட்டது கமல்ஹாசனை தான். தகவல் அறிந்து அங்கு சென்ற கமல், படுக்கையில் தன் அழகை எல்லாம் இழந்து, உருக்குலைந்து கிடந்த ஸ்ரீவித்யாவை பார்த்து மனம் கலங்கி, கண்ணீர் மல்க நின்றிருக்க, அவரை பார்த்தபடியே எதுவும் பேசாமல் உயிரை விட்டிருக்கிறார் ஸ்ரீவித்யா. சினிமா காதலை விட நிஜக்காதல் உணர்வுபூர்வமானதாக கமல், ஸ்ரீவித்யா வாழ்க்கையில் இருந்திருக்கிறது. ஒரு நேர்காணலில் செய்யாறு பாலு இந்த தகவலை கூறியிருக்கிறார்.

 

author avatar
Sumathi

More in CINEMA

To Top