தமிழ்நாட்டில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு வரப்போகின்ற சட்டமன்றத் தேர்தலுக்காக அனைத்துக் கட்சியினரும் தயாராகிக் கொண்டு வருகின்றனர். தேர்தலுக்காக அனைத்துக் கட்சியினருமே பல மாவட்டங்களில் மாநாடு மற்றும் எழுச்சிவுரை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் மணச்சநல்லூர் துறையூர் தொகுதியை அடுத்து முசிறி பேருந்து நிலையம் அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எழுச்சிவுரை நிகழ்ச்சி நடத்தினார். மக்களுக்கான கட்சி அதிமுக, ஆனால் குடும்பத்துக்கான கட்சி திமுக என்று விமர்சித்துள்ளார். அதிமுக கட்சியினருக்கு தமிழ்நாட்டு மக்களே மிகவும் முக்கியம். ஆனால் திமுகவிற்கு வீட்டு மக்களே முக்கியம். ஒரே குடும்பம் கிட்டத்தட்ட 8 கோடி மக்களை அடிமைப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதிமுகவில் விசுவாசமாக உழைத்தால் தொண்டர்கள் கூடப் பதவிக்கு வர முடியும். ஆனால் திமுகவில் வர முடியுமா? திமுகவில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே வரமுடியும். அதிமுகவில் பெயிண்டராகவும் டாஸ்மார்க் பணியாளர்களாகவும் இருந்தவர்களுக்கு எம்எல்ஏ பதவி கொடுத்தோம். ஜாதி மதம் எதுவும் இன்றி அதிமுகவில் பதவி கொடுத்துள்ளோம். திமுகவில் வாரிசு அரசியலில் நடந்து வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலினே முதல்வராக வருவாராம். வாரிசு பதவிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
50 ஆண்டு காலமாக நிலுவையில் இருந்த காவேரி நீர் பிரச்சனையை உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வாங்கிக் கொடுத்தோம். கொரோனாவில் ஓராண்டு ரேஷனில் விலையில்லா பொருட்கள் கொடுத்தோம். முதியோர்கள் 7 லட்சம் பேருக்கு மூன்று வேளை உணவு கொடுத்தோம். கொரோனா சமயத்தில் பொங்கல் பரிசாக ரூபாய் 2500 கொடுத்தோம். அதிமுக ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட்டும மின்சாரமும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட்டு மின்சாரமும் மானியமாக கொடுத்தோம். திமுக அரசு 5 ஆண்டு முடிவில் 5 லட்சத்து 38 கோடி கடன் வாங்கியுள்ளது. தமிழ்நாட்டு மக்களையே கடன்காரன் ஆக்கிவிட்டார் ஸ்டாலின் அவர்கள்.
பெட்ரோல் டீசல் விலையை குறைக்கின்றோம் என்று திமுக ஆட்சி கூறிவந்தது ஆனால் இதுவரை குறைக்கவில்லை. மாணவர்கள் பெற்ற கல்விக்கடனை ரத்து செய்யப்படும் என்று கூறி வந்தனர் ஆனால் இன்றுவரை ரத்து செய்யவில்லை. காக புத்தகம் சீருடை புத்தகப்பை சைக்கிள் மற்றும் லேப்டாப் அனைத்தையும் வழங்கியுள்ளோம். அதிமுக ஆட்சியின்போது ரூ. 7300 கோடி நிதி ஒதுக்கீட்டில் 52 லட்சத்து 35 ஆயிரத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்துள்ளோம். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இத்திட்டம் மீண்டும் அமலுக்கு வரக்கூடும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் மாதந்தோறும் தகுதியுள்ள பெண்களுக்கு ₹1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மிகவும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை…
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பிரபல குல் பிளாசா வணிக வளாகத்தில் கடந்த ஜனவரி 17ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர தீ…
சமுதாய வளர்ச்சிக்காகத் தன்னார்வத்துடன் முன்வந்து மிகச் சிறந்த முறையில் சமூகச் சேவை ஆற்றி வரும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு…
உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில், பெற்றோர் இல்லாத ஏழை தலித் பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை…
கோவை மேற்கு புறவழிச்சாலைக்கு உட்பட்ட மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி, சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்…
தஞ்சாவூர் அருகே ஆர். சுத்திப்பட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில், திடீரென நெல்…