மனைவி, மகனை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி… நெல்லையில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!

Spread the love

நெல்லையை சேர்ந்தவர் சகரியா (66), மனைவி மெர்சி. இவர்களுக்கு ஹென்றி, ஹார்லி பினோ (27) என இரு மகன்களும், ஹெலன் என்ற மகளும் உள்ளனர். சகாரியாவுக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, மெர்சி தனது இரு மகன்கள் மற்றும் மகளுடன் அதே தெருவில் வேறொரு வீட்டில் வசித்து வந்தார்.

கடத்த 21ஆம் தேதி ஹென்றிக்கு திருமணம் நடந்தது, இந்த திருமணத்தில் சகரியாவிற்கு உடன்பாடு இல்லை என்பதால், மெஸ்ஸி அவரை திருமணத்திற்கு அழைக்கவில்லை.
இந்நிலையில் ஹார்லி பினோ, தனது உடைமைகளை எடுத்து வருவதற்காக, நேற்று மதியம் தனது தந்தை வசித்து வரும் வீட்டிற்கு புறப்பட்டார். ஏற்கனவே பிரச்சனை இருப்பதால், ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என்று பயந்த மெர்சி, தனது மகனுடன் சென்றார். தாய் மகன் இருவரும் வீட்டிற்கு நுழைந்ததை பார்த்த சகாரியா, உடனே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதையும் மீறி, இருவரும் தங்கள் உடமைகளை எடுக்க முயன்ற போது, ஆத்திரம் அடைந்த சகரியா, அவர்கள் இருவரையும் பிடித்து இழுத்து ஒரு அறைக்குள் தள்ளி கதவை பூட்டினார்.

மேலும் வீட்டிலிருந்த பெட்ரோலை, ஹர்லின் பினோ, மெர்சி இருந்த அறையின் ஜன்னல் வழியாக ஊற்றி, தீ வைத்து விட்டார். மேலும் அவர் இருவரும், தீப்பிடித்து அலறிக் கொண்டிருந்த நேரத்தில், சகரியாவும் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். மூவரின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர், தீயணைப்பு துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். பின் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மூவரையும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில், தாயும் மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சகாரியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Srimathi

Recent Posts

“வரலாற்றில் முதல்முறை… சிபாரிசு, பணம் இல்லாமல் நடந்த 215 அதிகாரிகள் டிரான்ஸ்பர்”…. தமிழக பத்திரப்பதிவு துறையில் அதிரடி மாற்றம்….!

தமிழக பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவிற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக, முற்றிலும் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் 215…

7 minutes ago

தவெகவில் இணைந்த 6 முன்னாள் அதிமுக MLA-க்கள்…. இத்தனை கோடி சொத்தா?…. வாயடைத்துப்போன அரசியல் களம்….!

அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள 6 முன்னாள் எம்.எல்.ஏ-க்களின் சொத்து விவரங்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக…

16 minutes ago

தமிழக பெண்களுக்கு ஷாக் நியூஸ்…. ரேஷன் கார்டில் தவெக அரசு செய்யப்போகும் அதிரடி மாற்றம்… இனி ‘இவர்களுக்கு’ மகளிர் உரிமைத் தொகை கிடையாது….?

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்', தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத்…

27 minutes ago

வேலுமணி, சண்முகத்திற்கே வேட்டு வச்ச இபிஎஸ்… ஆனா ‘அவருக்கு’ மட்டும் ஸ்பெஷல் சலுகை…. அதிமுகவை உலுக்கும் ஒரே ஒரு பெண் எம்.எல்.ஏ…. லீமா ரோஸ் விவகாரத்தின் ‘அக்மார்க்’ அரசியல் ரகசியம்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து வரும் வேளையில், அதிமுகவில் உட்கட்சி ஒழுங்கு நடவடிக்கை…

39 minutes ago

தவெக vs திமுக: முதல்வரின் முதல் பயணத்திற்கே வந்த சோதனை… கரூருக்கு கிளம்பும் முன்பே விஜய்க்கு விழுந்த முட்டுக்கட்டை… புதிய பரபரப்பை கிளப்பிய திமுக….!

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். கடந்த…

46 minutes ago

CM விஜய் தேர்ந்தெடுத்த ‘புது வழி’…. அமைச்சர்களுக்குப் போட்ட ரகசிய உத்தரவு… டெல்லி வட்டாரத்தில் பரபரப்பு… அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்….!

மத்திய அரசுடன் கொள்கை ரீதியாக மாறுபட்டாலும், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நிர்வாக நலனைக் கருத்தில் கொண்டு டெல்லியுடன் மோதல் போக்கைக்…

52 minutes ago