விடிய விடிய மாறிய தலைவிதி.. விழித்து பார்த்தால் அக்கவுண்ட்டில் ₹294 கோடி… ஒரே இரவில் நான் கோடீஸ்வரன்.. செக் அவுட் செய்த இளைஞருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

Spread the love

பீகாரின் கயா மாவட்டம் மஸ்துபுரா கிராமத்தைச் சேர்ந்த விகாஷ் குமார் என்ற ஏழை பிளம்பர் தொழிலாளியின் வங்கிக் கணக்கில், திடீரென ரூ.294 கோடி வரவு வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாதத்திற்கு ரூ.12,000 மட்டுமே வருமானம் ஈட்டும் இவரது கணக்கில் வெறும் ரூ.113 மட்டுமே இருப்பு இருந்துள்ளது. இந்த நிலையில், முதலில் அவரது கணக்கில் ரூ.94 கோடி வரவு வைக்கப்பட்ட நிலையில், அன்றைய தினமே மாலையில் அந்தத் தொகை ரூ.294 கோடியாக உயர்ந்துள்ளது.

தனது வங்கிக் கணக்கு இருப்பைக் கண்டு அதிர்ச்சியும் பெருமகிழ்ச்சியும் அடைந்த விகாஷ் குமார், உடனடியாக இந்த விசித்திரமான பண வரவு குறித்து வங்கி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். இதற்கிடையில், சாதாரண பிளம்பர் தொழிலாளி ஒரே நாளில் கோடீஸ்வரரான செய்தி காட்டுத்தீ போல பரவியதால், உள்ளூர் பொதுமக்கள் பலரும் உண்மையைத் தெரிந்து கொள்ள விகாஷின் வீட்டின் முன்பு குவியத் தொடங்கினர்.

இவ்வளவு பெரிய நல்வரவு வங்கி அதிகாரிகளின் தவற்றால் நேரிட்டதா, தொழில்நுட்பக் கோளாறா அல்லது ஏதேனும் ஆன்லைன் மோசடி கும்பலின் பின்னணி இதில் உள்ளதா என்பது குறித்து வங்கியும் காவல்துறையும் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக, விகாஷ் குமாரின் வங்கிக் கணக்குடன் தொடர்புடைய பிற கணக்குகள் மற்றும் பணப்பரிமாற்ற அடையாள எண்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து வருவதாக போலீஸ் அதிகாரி மனோஜ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

Swetha

Recent Posts

திடீர் யு-டர்ன்..! ரூ. 20,000 கோடி ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டத்தை முழுமையாகக் கைவிடுகிறது தமிழக அரசு..? அதிரடி பின்னணி..!!

தமிழகத்தில் நுகர்வோரின் மின் பயன்பாட்டைக் கணக்கிட, மின்வாரிய ஊழியர்களின் உதவியின்றிச் செயல்படும் சுமார் ரூ. 20,000 கோடி மதிப்பிலான ‘ஸ்மார்ட்…

3 minutes ago

“உன்னை சந்திச்சு என்ன பயன்?!”.. உக்ரைன் அதிபரை அசிங்கப்படுத்திய புதின்… உலகையே உலுக்கிய அந்த ஒரு வார்த்தை.. அதிரடி பின்னணி..!!

நான்கு ஆண்டு கால உக்ரைன் - ரஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், இரு நாட்டுத் தலைவர்களும் நேரடியாகச் சந்தித்துப்…

5 minutes ago

“என்னை யாரும் தேட வேண்டாம்”.. பெற்றோரின் நெஞ்சில் இடியை இறக்கிய மாணவியின் ஒற்றை கடிதம்.. காதலனுடன் எடுத்த அதிரடி முடிவு.. உறைந்துபோன குடும்பம்..!!

கோவையைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர், அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.எஸ்சி. படித்து வருகிறார்.…

14 minutes ago

“கை வெச்சுப் பாரு” – மும்பையில் பெண் பயணியிடம் ஆட்டோ ஓட்டுநரின் அநாகரீக அத்துமீறல்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!!

மும்பையில் பெண் பயணி ஒருவரிடம் ஆட்டோ ஓட்டுநர் அநாகரீகமான முறையில் பாலியல் ரீதியான கருத்துக்களைத் தெரிவித்த சம்பவம் சமூக வலைதளங்களில்…

17 minutes ago

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட உத்தரவிட முடியாது.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்ட உத்தரவு..!!

மத்திய அரசு தேசிய கீதத்தை ( வந்தே மாதரம்) முதலில் பாட உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் பதவி ஏற்பு…

22 minutes ago

“விரைவில் நடக்கவிருந்த திருமணம்.. காதலி வீட்டில் காதலனுக்கு நேர்ந்த சோகம்.. ஒரு நிமிட விரக்தியால் நேர்ந்த விபரீதம்.. பதறவைக்கும் பின்னணி”..!!

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த காவேரிராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் தீபக், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார்…

23 minutes ago