உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் கணவன், மனைவி மற்றும் காதலிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நடுரோட்டில் ஒரு பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. நேத்ரபால் என்ற நபர் தனது காதலியுடன் காரில் செல்வதைக் கண்ட அவரது மனைவி குலாபோ, காரை நிறுத்தும்படி சத்தமிட்டுள்ளார். ஆனால், கணவர் காரை நிறுத்தாமல் வேகமாகச் செல்ல முயன்றதால், அவரைத் தடுப்பதற்காக மனைவி துணிச்சலுடன் காரின் போனட் மீது ஏறியுள்ளார்.
மனைவி காரின் போனட்டில் தொங்கிக் கொண்டிருந்த நிலையிலும், நேத்ரபால் காரை நிறுத்தாமல் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு அப்படியே ஓட்டிச் சென்றுள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் காட்சியைக் கண்ட அக்கம் பக்கத்தினரும், சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும் உடனே தங்களது பைக்குகளில் காரைத் துரத்திச் சென்று, தேவ்சரா-பல்லியா சாலையில் அதை மடக்கி நிறுத்தினர். காரை நிறுத்தியதும், அங்கிருந்த கோபமடைந்த பொதுமக்கள் கணவரை காரில் இருந்து வெளியே இழுத்துத் தர்மஅடி கொடுத்தனர்.
இந்தச் சம்பவத்தின் போது ஏற்பட்ட பரபரப்பைப் பயன்படுத்தி கணவனும் அவனது காதலியும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். எனினும், பெண் ஒருவர் காரின் போனட்டில் தொங்கியபடி செல்லும் இந்த அதிர்சி வீடியோ அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து மனைவி குலாபோ அளித்த புகாரின் பேரில், பரேலி மாவட்டத்தின் பமோரா காவல் நிலைய போலீசார் கணவர் நேத்ரபால் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத வகையில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஒரு புதிய மும்முனைப் போட்டியைச் சந்தித்திருக்கிறது.…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு…
ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர், அரசு அதிகாரிகள் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் உயிரிழந்து இரண்டு…
காஞ்சிபுரம் அடுத்த கூத்திரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் காரை பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அருள்மணி ஆகிய…
தமிழ் திரையுலகில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான…
திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் ஒரே நேர்க்கோட்டில், ஒரே குறிக்கோளுடன் ஒன்றாகப் பயணிப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்…