உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் பிலாஸ்பூர் பகுதியைச் சேர்ந்த நஸ்ரீன் (40) என்ற பெண்ணை, அவரது கணவர் இஸ்ரார் மற்றும் குடும்பத்தினர் இணைந்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நஸ்ரீனின் தந்தை மறைவிற்குப் பிறகு அவரது சொத்துக்கள் மகள்களுக்குச் சொந்தமானது. 5 குழந்தைகளுக்குத் தாயான நஸ்ரீனிடம், அந்த நிலத்தை விற்றுப் பணம் தருமாறு கணவர் தரப்பில் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நிலத்தை விற்க நஸ்ரீன் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த கணவர், நடு இரவில் நஸ்ரீனின் அந்தரங்க உறுப்பு உட்பட உடலின் 6 இடங்களில் கொடூரமாக மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை செய்து படுகொலை செய்துள்ளார். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மின்சாரம் பாய்ச்சப்பட்டுக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தலைமறைவாக இருந்த கணவரைப் பிலாஸ்பூர் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில், எல்லைப் பாதுகாப்புப் படை வீரரான அமர்ஜித் சிங் என்பவர் தனது மனைவி ராமாவை கொலை…
கர்நாடக மாநிலம் பெங்களூரு மடிவாளா காவல் எல்லைக்கு உட்பட்ட சிக்க அடுகோடி பகுதியில், 1 1/2 வயது குழந்தை ஒன்று…
தெலுங்கானா மாநிலம் ஜனகாமா பகுதியைச் சேர்ந்த மௌபள்ளி மானசா (20) என்ற இளம் பெண், தனது பெற்றோருடன் ஐதராபாத்தில் உள்ள…
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த கரும்பாறை கிராமத்தில், பிள்ளைகள் வெளியூரில் வசிப்பதால் தனிமையில் வாழ்ந்து வந்த 85 வயது முதியவர்…
காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தம்பதிக்குத் திருமணமாகி 6 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், கணவனின் வேலை காரணமாக அடிக்கடி வெளியூர்…
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்துள்ள ஓசூர் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சு என்ற பெண், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து…