“என் புருஷன் செத்தா தான் உன் கூட சந்தோசமா இருக்க முடியும்”… தம்பியுடன் சேர்ந்து மனைவி போட்ட சினிமா பாணி ஸ்கெட்ச்… நெடுஞ்சாலையில் நடந்த பயங்கரம்…!

Spread the love

தெலுங்கானா மாநிலம் பெத்தரவிடு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் லாலு ஸ்ரீனு என்பவர், கஞ்சா விற்பனை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் சிறையில் இருந்த காலத்தில், அவரது மனைவி ஜான்சிக்கும் அவரது தம்பியின் நண்பரான கார் டிரைவர் சூரிய நாராயணா என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. சிறையில் இருந்த லாலு ஸ்ரீனுவை பார்க்கச் சென்றபோது, தங்களின் விவகாரம் அவருக்குத் தெரிந்ததை ஜான்சி உணர்ந்தார். அப்போது லாலு ஸ்ரீனு அவர்களைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதால், அவர் ஜாமீனில் வெளிவருவதற்கு முன்பே அவரைக் தீர்த்துக்கட்ட ஜான்சி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து சினிமா பாணியில் திட்டம் தீட்டினார்.

இதற்காக குண்டூரைச் சேர்ந்த ஒரு கூலிப்படைக்கு ரூ.2 லட்சம் பேரம் பேசி, ஒரு லட்சத்தை முன்பணமாக ஜான்சி வழங்கினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு லாலு ஸ்ரீனு ஜாமீனில் வெளியே வந்தபோது, அவரை வரவேற்க ஜான்சி தனது தம்பியுடன் சிறை வாசலில் காரில் காத்திருந்தார். கணவரை காரில் ஏற்றிக்கொண்டு வரும் வழியில், கள்ளக்காதலன் சூரிய நாராயணாவும் கூலிப்படையினரும் மற்றொரு காரில் அவர்களைப் பின்தொடர்ந்தனர். இரண்டு இடங்களில் கொலை செய்ய முயன்று தோல்வியடைந்த நிலையில், லாலு ஸ்ரீனு சிறுநீர் கழிக்க காரை நிறுத்தச் சொன்னபோது சரியான சமயம் பார்த்து ஜான்சி மற்றும் அவரது தம்பி ஆகியோர் லாலுவின் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவினர்.

கண்ணில் மிளகாய்ப் பொடி விழுந்து லாலு துடித்த நிலையில், கூலிப்படையினர் அவரைத் தூக்கி காரில் போட்டனர். அப்போது ஜான்சியும் அவரது தம்பியும் சேர்ந்து கத்தியால் லாலுவின் வயிற்றில் சரமாரியாகக் குத்திக் கொலை செய்தனர். பின்னர் கள்ளக்காதலனின் அறிவுரைப்படி, ஜான்சியும் அவரது தம்பியும் போலீசில் சரணடைந்து இது ஒரு தற்காப்பு நடவடிக்கை போல காட்ட முயன்றனர். ஆனால், போலீசாரின் தீவிர விசாரணையில் கள்ளக்காதலன் மற்றும் கூலிப்படையுடன் சேர்ந்து திட்டமிட்டு இந்தக் கொலையைச் செய்தது அம்பலமானது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“தமிழகமே அதிருது.. 2026 தேர்தல் சர்வே”… மீண்டும் அரியணையில் அமரும் திமுக.. விஜய்க்கு சான்ஸே இல்ல… 6 முக்கிய நிறுவனங்களின் கணிப்புகள் வெளியீடு…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தின் அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத…

3 minutes ago

“வாக்கு கேட்கச் சென்ற இடத்தில் வாக் அவுட்?… திமுக வேட்பாளரை திணறடித்த கிராம மக்கள்… பூம்புகாரில் தேர்தல் களம் திடீர் சூடு”…!!!

மயிலாடுதுறை மாவட்டத்தின் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி தற்போது தமிழகத் தேர்தலின் மிக முக்கியமான போர்க்களமாக மாறியுள்ளது. தமிழகத்தின் இரு பெரும்…

7 minutes ago

30 பந்துகளில் 34 ரன்கள்… சென்னை அணியை கவிழ்த்த மேத்யூ ஷார்ட்… கையில் இருந்த வெற்றியை ஐதராபாத்திடம் தாரைவார்த்தது எப்படி..?

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில் பேட்டிங்…

7 minutes ago

கடலில் நடந்த கோரச் சம்பவம்…. 14 இந்தியக் கப்பல்களை வழிமறித்த ஈரான் கடற்படை…ஹார்முஸ் ஜலசந்தியில் பற்றி எரியும் பதற்றம்…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு அதிகரித்து வரும் சூழலில், உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில்…

11 minutes ago

எடப்பாடி தொகுதியில் நடந்த நள்ளிரவு திருப்பம்… விஜய்யின் தவெக எடுக்கப்போகும் புது அவதாரம்… கடைசி நிமிட டிவிஸ்ட்….!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் முனைப்பில் களம் கண்டுள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…

14 minutes ago

“திடீர் திருப்பம்”… கோட்டையை நோக்கிப் பாயும் அடுத்த வாரிசு?… துர்கா ஸ்டாலினின் சூறாவளிப் பயணத்தின் பின்னணியில் இருக்கும் பிளான்…!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரப்பை எட்டியுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் இளைஞரணி…

18 minutes ago