கடலில் நடந்த கோரச் சம்பவம்…. 14 இந்தியக் கப்பல்களை வழிமறித்த ஈரான் கடற்படை…ஹார்முஸ் ஜலசந்தியில் பற்றி எரியும் பதற்றம்…!

Spread the love

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு அதிகரித்து வரும் சூழலில், உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் கடற்படை தாக்குதல் நடத்தியிருப்பது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் முற்றுகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஈரான் இந்த வழித்தடத்தை மூடுவதாக அறிவித்த நிலையில், தடையை மீறிச் சென்ற கப்பல்கள் மீது ஈரான் புரட்சிகர காவல் படை துப்பாக்கிச்சூடு மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் இந்திய கொடியுடன் வந்த கப்பல்கள் உள்ளிட்ட 14 கப்பல்கள் பாதிக்கப்பட்டிருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் ஹார்முஸ் ஜலசந்தி தற்காலிகமாக திறக்கப்பட்டிருந்த நிலையில், கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு மற்றும் உரங்களை ஏற்றி வந்த 7 இந்திய கப்பல்கள் உட்பட பல வெளிநாட்டுக் கப்பல்கள் அந்த வழியாகப் பயணித்தன. அப்போது திடீரென அங்கு வந்த ஈரானின் இரண்டு போர் படகுகள் கப்பல்களை வழிமறித்து தாக்குதல் நடத்தின. இதில் கப்பல்களில் இருந்த கன்டெய்னர்கள் சேதமடைந்த போதிலும், நல்வாய்ப்பாக ஊழியர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிரடித் தாக்குதலால் ஒரு கப்பலைத் தவிர மற்ற அனைத்துக் கப்பல்களும் பாதியிலேயே திரும்பிச் சென்றன.

இந்தச் சம்பவம் குறித்து இந்தியா தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. உடனடியாக ஈரான் தூதரை அழைத்து இந்தியா விளக்கம் கேட்ட நிலையில், இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவில் விரிசலை ஏற்படுத்துமோ என்ற அச்சம் எழுந்தது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளை இந்தியா பெரிதும் நம்பியிருக்கும் நிலையில், இத்தகைய தாக்குதல்கள் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது.

சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்துள்ள இந்தியாவுக்கான ஈரான் தூதர் அப்துல் மஜித் ஹகீம் இலாஹி, இந்தியா மற்றும் ஈரான் இடையிலான உறவு கலாசாரம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று குறிப்பிட்டுள்ளார். கப்பல்கள் மீதான தாக்குதல் குறித்து தமக்கு விரிவான தகவல்கள் தெரியவில்லை எனக் கூறிய அவர், ஈரான் அமைதியையே விரும்புவதாகவும், இந்தச் சிக்கல் விரைவில் சுமுகமாகத் தீர்க்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே வலுவான உறவு நீடிப்பதாகவும், அது மேலும் வளரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

“10 வருஷம்.. 3 கட்சிகள் தாவி”… நீங்கெல்லாம் எப்படி ஜெயிக்க போறீங்க… குஷ்புவை இழுத்து சுந்தர்.சிக்கு ‘செக்’ வைத்த பிரகாஷ் ராஜ்…!

மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியின் வேட்பாளராக இயக்குநர் சுந்தர்.சி களமிறங்கியுள்ள நிலையில், அவரை எதிர்த்து நடிகர் பிரகாஷ் ராஜ்…

2 minutes ago

“ஏன்டா அந்தப் பேப்பர்ல பச்சைக்கிளி-யே இல்லையே!”… ராகுல் சொன்னது ஒன்னு… செல்வம் சொன்னது ஒன்னு…. மேடையிலேயே அரங்கேறிய ‘லைவ்’ காமெடி…!

அரசியல் மேடைகளில் மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை, ஆனால் அது சில நேரங்களில் விபத்தாக முடிந்துவிடுவதுண்டு. முன்னொரு காலத்தில் ராகுல்…

13 minutes ago

“250 கோடி கேட்ட சங்கீதாவை வெறும் 35 கோடியில் மடக்கிய விஜய்”… ஜோசியர் முன்னிலையில் விடிய விடிய நடந்து முடிந்த பஞ்சாயத்து….!

தமிழக அரசியலிலும் திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய்யின் விவாகரத்து விவகாரம், தற்போது இறுதிக்கட்டத்தை…

21 minutes ago

“காதல் பலி..”நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சோகம்.. ஒரு தவறான மெசேஜால் பறிபோன இரண்டு இளம் உயிர்கள்!

சூரஜ் மற்றும் கோமல் ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மகிழ்ச்சியாக இருந்த நிலையில், யாரோ ஒரு நபர் அனுப்பிய ஒரு…

26 minutes ago

சென்னைக்கு ‘சூப்பர்-6’ ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்…! மினி பஸ் முதல் ஐடி வேலை வரை…. திமுகவின் மெகா தேர்தல் பிளான்…!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தலைநகர் சென்னை மக்களுக்காக 'சென்னை சூப்பர்-6' என்ற அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை திமுக…

30 minutes ago

“எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே”… இயக்குனர் இமயம் பாரதிராஜாவை நேரில் சந்தித்த ராதிகா….. கண்ணீர் வரவழைக்கும் ஏமோனஷனல் வீடியோ..!

இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'தாய்…

30 minutes ago