Connect with us

CINEMA

ரெக்கார்டிங் அன்று SPB-க்கு ஏற்பட்ட உடல்நலப் பிரச்சனை… எதிர்பாராத விதமாக மலேசியா வாசுதேவனுக்கு வந்த முதல் பாடல் வாய்ப்பு!  

தமிழ் சினிமாவில் பல சூப்பர்ஹிட் பாடல்களைப் பாடி ரசிகர்களின் செவிகளில் தேன்மழை பொழிந்தவர் மலேசியா வாசுதேவன். குறிப்பாக இசைஞானி இளையராஜா இசையில் அவர் பாடிய 80 கள் மற்றும் 90 கள் பாடல்கள் இன்றும் ரசிக்கத்தக்கவையாக உள்ளன.

மலேசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அவர், நடிக்கவேண்டும் என்ற ஆசையில் தமிழ்நாடு வந்து வாய்ப்புகளை தேடியுள்ளார். பொருளாதார பிரச்சனை காரணமாக தன்னுடைய பாஸ்போர்ட்டையே விற்றுவிட்டு திரும்ப மலேசியா செல்ல முடியாமலும் தவித்துள்ளார்.

   

அப்போதுதான் அவருக்கு எஸ்பிபியின் இசைக்குழுவில் பாடகராகும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அவர்களோடு இணைந்து இந்தியா முழுவதும் பல இடங்களில் நூற்றுக்கணக்கான கச்சேரிகளில் பாடியுள்ளார். அதன் மூலமாகதான் இளையராஜா, கங்கை அமரன் மற்றும் பாஸ்கர் ஆகியோரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இளையராஜா பாரதிராஜா கூட்டணியில் உருவான 16 வயதினிலே படத்தில் முதல் முதலில் பாடல் ரெக்கார்டிங்குக்கு தேதி குறிக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாடலை தன்னுடைய நண்பன் எஸ் பி பாலசுப்ரமணியம்தான் பாடவேண்டும் என பாரதிராஜா உறுதியாக இருந்துள்ளார்.

ஆனால் ரெக்கார்டிங் அன்று எஸ் பி பிக்கு தொண்டையில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டு பாடமுடியாத சூழல் உருவாகியுள்ளது. அதனால் அப்போது இளையராஜா தங்கள் குழுவில் இருந்த மலேசியா வாசுதேவனை ட்ராக் பாட வைக்கலாம் என முடிவு செய்துள்ளார். அவர் பாடும் ட்ராக்கை வைத்துக்கொண்டு பின்னர் எஸ் பி பி பின்னர் வந்து பாடட்டும் எனக் கூறியுள்ளார்.

இதற்கு பாரதிராஜா அரைமனதாகதான் ஒத்துக்கொண்டுள்ளார். அன்று அவர் ட்ராக் பாடிய பாடல்கள்தான் ‘செவ்வந்தி பூ முடிச்ச’ மற்றும் ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ ஆகிய பாடல்கள். அந்த இரண்டு பாடல்களையும் கேட்டு வியந்த பாரதிராஜாவும், இளையராஜாவும் மலேசியா வாசுதேவன் குரலிலேயே பாடல்கள் இருக்கட்டும் என்று முடிவு செய்து விட்டார்களாம். அந்த இரண்டு பாடல்களும் படம் ரிலீஸான போது மிகப்பெரிய ஹிட்டாகி மலேசியா வாசுதேவனை அடுத்த டி எம் எஸ் என்ற அளவுக்குக் கொண்டு சென்றது.

Continue Reading

More in CINEMA

To Top