Connect with us

தோல்வி மேல் தோல்வி.. மண்ணோடு மண்ணாகிப் போன இடத்தில் பீனிக்ஸ் பறவையாக உருவெடுத்த HONDA.. அசர வைக்கும் வரலாறு..

HISTORY

தோல்வி மேல் தோல்வி.. மண்ணோடு மண்ணாகிப் போன இடத்தில் பீனிக்ஸ் பறவையாக உருவெடுத்த HONDA.. அசர வைக்கும் வரலாறு..

தனது விடா முயற்சியால் விதியை மதியால் வென்று ஹோண்டா என்னும் ஆட்டோமொபைல் சரித்திரம் படைத்த ஒரு சாமானியன் வரலாறுதான் இது. 1906-ல் ஜப்பானில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தார் சோய்ச்சிரோ. அவர் அம்மா ஒரு நெசவாளி. அப்பா இரும்பு பட்டறை வேலை செய்யும் கருமார். சைக்கிள் ரிப்பேர் செய்யும் கடை வைத்திருந்தார். இது தான் சோய்ச்சிரோவின் குடும்பம்.

ஏழை மாணவரான சோய்ச்சிரோவுக்கு என்று ஒரு கனவு இருந்தது. மோட்டார் வாகனத்தின் இன்றியமையாத உதிரி பாகமான பிஸ்டன் ரிங் ஒன்றை தனது கற்பனைப்படி செய்ய வேண்டும் என்பது தான் அது. காலை முழுதும் பள்ளியில் மாலை வீட்டுக்கு வந்ததும், தனது கனவு கண்டுபிடிப்புக்கு வடிவம் கொடுப்பதில், இறங்கிவிடுவார்.

அவருடைய நோக்கம் என்னவென்றால் அற்புதமான பிஸ்டன் ரிங் ஒன்றை கண்டுபிடித்து அதை பிரபல மோட்டார் நிறுவனமான டோயோட்டாவுக்கு விற்கவேண்டும் என்பது தான். ஆராய்ச்சி நீண்டுகொண்டே சென்றது. ஒரு நாள் அவர் நினைத்த படி தனது பட்டறையில் ஒரு பிஸ்டன் ரிங்கை வடிவமைத்தார். அதை எடுத்துக் கொண்டு கனவுகளையும் சுமந்துகொண்டு டோயோட்டாவின் அலுவலக கதவுகளை தட்ட அங்கு அவருக்கு கிடைத்தது ஏமாற்றமே. “நாங்கள் எதிர்பார்க்கும் தரத்தில் இது இல்லை. இதை ஏற்றுக்கொள்ளமுடியாது” என்று கூறி அடிக்காத குறையாக விரட்டிவிட்டனர்.

   
Honda 2

#image_title

 

தொட்டதெல்லாம் துலங்க வைக்கும் தைப்பூச மகிமை.. இதெல்லாம் இந்த நாள்ல செஞ்சா அமோக வெற்றி

சோய்ச்சிரோ கல்லூரிக்கு சென்றபோது சக மாணவர்கள் கேலி செய்தனர். சோய்ச்சிரோ மனம் தளரவில்லை. இரண்டு ஆண்டுகள் இடையறாத முயற்சிகளுக்கும் தோல்விகளுக்கும் பின்னர் ஒரு நாள் டோயோட்டாவின் கான்ட்ராக்ட் கிடைத்தது.

ஆனல் அந்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை. பெரிய நிறுவனத்தின் காண்ட்ராக்ட் உள்ளது. உடனடியாக ஒரு தொழிற்சாலையை துவக்கவேண்டும். ஆனால் போர்க்காலம் என்பதால் கட்டுமான பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. ஒரு வழியாக பாக்டரியை கட்டி முடித்தாகிவிட்டது. ஆனால் இரண்டாம் உலகப் போரின் உச்சத்தால் அமெரிக்க விமானங்களின் குண்டுகளுக்கு இரையாகி தரைமட்டமானது.

அப்போதும் மனம் தளரவில்லை சோய்ச்சிரோ. தனது பணியாளர்கள் அனைவரையும் அழைத்தார். “அதோ அந்த விமானங்களை பின்தொடர்ந்து ஓடுங்கள். விமானங்களில் இருந்து எரிபொருள் நிரப்பிய பின்னர் கீழே வீசப்படும் GASOLENE கேன்களை சேகரியுங்கள். அதில், நமது பாக்டரிக்கு தேவையான மூலப்பொருள் உள்ளது. அது வேறெங்கும் கிடைக்காது. அமெரிக்க அதிபர் ட்ரூமன் நமக்கு தரும் பரிசு அது!” என்றார்.

ரயிலில் மட்டும் பிடித்த சீட்டை முன்பதிவு செய்ய முடியாது ஏன் தெரியுமா? இதுக்குப் பின்னால இப்படி ஒரு அறிவியல் உண்மையா?

ஓரளவு பாக்டரியை நிர்மாணித்து மீண்டும் உற்பத்தியை துவக்கவிருந்த நேரம். மீண்டும் நிலநடுக்கம் என்னும் கோர இயற்கைச் சீற்றழிவால் தனது தொழிற்சாலையை இழந்தார். இம்முறை தனது பிஸ்டன் தொழில்நுட்பத்தை டோயோட்டாவுக்கே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் சோய்ச்சிரோ.

Honda 1

#image_title

விரக்தியிலும், தோல்வி தந்த வேதனையிலும் நாட்களை கழிப்பதற்கு பதில், ஒரு புதிய
முடிவை அவர் எடுத்தார். அவரிடம் ஒரு சிறிய மோட்டார் இருந்தது. புல்வெட்டும் இயந்திரத்தில் பொருத்தி புல்லை வெட்டக்கூடிய அளவிற்கு ஒரு சிறிய மோட்டார் அது. தன்னுடைய சைக்கிளில் அதை பொருத்தினார். சைக்கிள் மோட்டார் சைக்கிள் ஆனது. மோட்டார் சைக்கிள் உருவான கதை இது தான்.

வீட்டிற்கும் மார்கெட்டுக்கும் இடையே அந்த மோட்டார் சைக்கிளை சோய்ச்சிரோ
பயன்படுத்தினார். அதை பார்த்த அக்கம்பக்கத்தினரும் அவர் நண்பர்களும், அவர்களுக்கும் அதே போல ஒன்றை செய்து தரும்படி கேட்டனர். பிறகு சைக்கிள் தொழிற்சாலை ஆரம்பிக்கலாம் என்றெண்ணி ஜப்பானில் உள்ள ஒரு சைக்கிள் கடை விடாமல்
18,000 சைக்கிள் கடைகளுக்கும் கடிதம் எழுதினார்.

இது குடும்பமாக இல்ல.. சினிமா பல்கலைக்கழகமா? தலைசுற்ற வைக்கும் ஒய்.ஜி.மகேந்திரன் உறவுகள் ரஜினி முதல் அனிருத் வரை நீளும் லிஸ்ட்

18000 பேரில், சுமார் 3000 பேர் ஹோண்டாவுக்கு உதவ முன்வந்தனர். அவர்கள் அளித்த
பொருளுதவியை கொண்டு தனது முதல் உற்பத்தியை துவக்கினார் சோய்ச்சிரோ.
அன்று முதல் ஆரம்பித்த வெற்றியால் ஜப்பானில் வெற்றிக்கொடி நாட்டிய பின்னர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கும் சோய்ச்சிரோவின் மோட்டார் சைக்கிள் எஞ்சின்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதன்பின் 4 சக்கர வாகன உற்பத்தியிலும் கொடி கட்டிப்பறந்தது அந்நிறுவனம்.

Honda 3

#image_title

அது சரி… சோய்ச்சிரோவின் முழு பெயர் தெரியுமா? சோய்ச்சிரோ ஹோண்டா. இன்று சோய்ச்சிரோவின் ஹோண்டா நிறுவனத்துக்கு அமெரிக்கா மற்றும் ஜப்பானில் மட்டும் 1,00,000 ஊழியர்களுக்கும் மேல் உள்ளனர். ஆட்டோமொபைல் துறையில் பல புதுமைகளை புகுத்தி ஏற்றம் கண்டு இன்று உலகின் முன்னனி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது ஹோண்டா.

Continue Reading
To Top