Categories: சினிமா

நிறைய லாஜிக் மிஸ்டேக்.. பாலா படத்துல இப்படி ஒன்ன எதிர்பார்க்கவே இல்ல.. வணங்கான் படத்தை விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறன்..!

Spread the love

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான பாலா இயக்கத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான திரைப்படம் தான் வணங்கான். இந்தப் படத்தில் முதலில் சூர்யா நடிக்க இருந்த நிலையில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட வணங்கான் படத்திலிருந்து அவர் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து இப்படத்தில் நடிக்க அருண் விஜய் ஒப்பந்தமான நிலையில் படத்தின் சூட்டிங் தொடங்கியது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் பாடல்களை உருவாக்கிய நிலையில் பின்னணி இசையில் சாங் சி எஸ் அட்டகாசமாக ஸ்கோர் செய்துள்ளார். இவருடைய பின்னணி இசை படத்தின் தரத்தை உயர்த்தவும் ரசிகர்களை படத்தோடு ஒன்று செய்யவும் காரணமாக அமைந்துள்ளது. படத்தில் அருண் விஜயோடு ரிதா மற்றும் ரோஷினி பிரகாஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் பாலாவையும் அருண் விஜயையும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் வனங்கான் திரைப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், வணங்கான் படத்தின் கதை என்னவென்றால் ஹீரோவும் அவருடைய தங்கையும் சுனாமியால் பாதிக்கப்பட்ட தாய் தந்தையை இழந்து நிற்கின்றனர். ஹீரோ இதில் ஒரு மாற்றுத்திறனாளி. ஆசிரமத்தில் இருவரும் வளர்ந்து வரும் நிலையில் ஹீரோவுக்கு வாய் பேசவும் முடியாது காதும் கேட்காது. ஆனால் முரட்டுத்தனமான ஆளாக இருப்பார். இவர் இப்படியே சும்மா இருந்தா இப்படி தான் பண்ணிக்கிட்டு இருப்பார் என்று நினைத்து அவரை ஒரு மாற்றுத்திறனாளி ஆசிரமத்தில் வேலைக்கு சேர்க்கின்றன. அவர் எப்படி எல்லா சூழ்நிலைகளையும் சமாளித்து வருகிறார் என்பதுதான் படத்தின் கதை. ஆனால் படம் தொடங்கி கதைக்குள்ளேயே ரொம்ப லேட் ஆகத்தான் செல்கிறார்கள்.

இடைவேளை காட்சிக்கு 10 நிமிடங்களுக்கு முன்புதான் கதைக்கு செல்கின்றனர். அதுவரை ஹீரோவை ஹீரோயின் காதல் செய்வது போன்ற பல காட்சிகள் உள்ளது. அதேசமயம் இரண்டாம் பாதியில் விறுவிறுப்பாக செல்கிறது. இரண்டாம் பாதியில் அடுத்து என்ன அடுத்து என்ன என்ற சுவாரஸ்யம் உள்ளது. படத்தில் சமுத்திரக்கனி ரோல் நன்றாகவே அமைந்துள்ளது. அருண் விஜய் பிரமாதமாக நடித்துள்ளார். அதேபோல அவருக்கு தங்கையாக நடித்த வரும் சூப்பராக நடித்திருக்கிறார். படத்தில் ஏராளமான லாஜிக் மிஸ்டேக் உள்ளது. அதுவும் சிறைக்குள்ளேயே வந்து கைதியை மற்றவர்கள் சந்திப்பது போன்ற காட்சியை எல்லாம் பாலாவின் படத்தில் எதிர்பார்க்கவே இல்லை. சண்டை காட்சிகள் நன்றாக அமைந்துள்ளன.

வழக்கமான பாலா பட சண்டை காட்சிகள் தான் என்றாலும் நன்றாக எடுத்து இருக்கின்றனர். முதல் பாதையில் சில காட்சிகளுக்கு பதிலாக கதைக்கு சம்பந்தப்பட்ட காட்சிகளை வைத்திருந்தால் இந்த படத்தை சூப்பர் படம் என்றே சொல்லலாம். அதனைப் போலவே ஹீரோவை எதிர்ப்பதற்கு வில்லன் யாரும் இல்லை. வில்லன் ஒருத்தர் கரெக்ட் ஆக இருந்திருந்தால் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற விறுவிறுப்பு இருந்திருக்கும். சரியான வில்லன் இல்லாததால் படம் ஓரளவுக்கு சொதப்பியுள்ளது. தேவையில்லாம படத்துல நிறைய சீன் வச்சு நேரத்தை வீணடிச்சுட்டாங்க. பாதி படம் அதனாலயே போயிடுச்சு. இருந்தாலும் இரண்டாம் பாதியில் ரசிகர்கள் பாராட்டும் அளவுக்கு கிளைமாக்ஸ் காட்சி பாலா படங்களில் வழக்கம் போல இருப்பதைப் போல ரசிகர்களை ஒரு வருத்தத்துடன் அனுப்புவது போலவே அமைந்துள்ளது என்று ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார்.

Nanthini

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

5 மணத்தியாலங்கள் ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

5 மணத்தியாலங்கள் ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

5 மணத்தியாலங்கள் ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

5 மணத்தியாலங்கள் ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

5 மணத்தியாலங்கள் ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

5 மணத்தியாலங்கள் ago