சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே குளிர்பான டீலர் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் கடன் வாங்கியவர் ஜாதியை சொல்லி பொதுவெளியில் குடும்பத்தை அசிங்கமாக பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நபர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதில் டீலர் தூக்கு போட்டு இறந்த நிலையில் விஷம் குடித்த மனைவி மற்றும் மகள் தீவிர சிகிச்சையில் உள்ளனர். மேலும் இறப்பதற்கு முன்பு மனைவியுடன் சேர்ந்து வெளியிட்ட தற்கொலை வீடியோவும் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளையான்குடி அருகே உள்ள பெரும்பச்சேரியை சேர்ந்த மணிகண்டன் (42) என்பவர் எமனேஸ்வரம் கிராமத்தை சேர்ந்த பழனி என்பவர் உடன் குளிர்பான டீலராக வேலை பார்த்து வந்துள்ளார்.
குளிர்பானம் விற்பனை செய்வதில் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையால் பழனி மணிகண்டனிடம் பணம் வாங்கியுள்ளார். சில வருடங்கள் கழித்து மணிகண்டன் பழனியிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டபோது பழனி வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் இருந்ததோடு மணிகண்டனையும் அவர் குடும்பத்தையும் பொதுவெளியில் திருட்டுப் பயலே திருட்டுப் பய குடும்பம் என்று பேசியுள்ளார். இதனால் மனமுடைந்த மணிகண்டன் இறப்பதற்கு முன்பு மனைவியோடு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், இதற்குமேல் எங்களால ஒண்ணுமே செய்ய முடியாது. அதனாலதான் இந்த முடிவுக்கு வந்தோம். நம்பி தான் பணத்தை கொடுத்தோம்.
இப்போ எங்களிடம் ஒன்றுமே இல்லை. எவ்வளவோ முறை கேட்டு பார்த்தோம். ஆனால் பொது வெளியில் எங்கள் குடும்பத்தை அசிங்கமா பேசுறாரு. ஜாதியை சொல்லி திட்டி ரொம்ப அசிங்கமா ஆயிடுச்சு. போலீஸ்க்கு லெட்டர் எழுதி விட்டோம். குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டோம். இத பாக்குறவங்க எங்களுக்கு நீதி கிடைக்க வழி பண்ணுங்க என்று மனம் உருகி பேசியுள்ளனர். மனைவி மற்றும் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே இது குறித்து தகவல் அறிந்தால் அக்கம் பக்கத்தினர் மனைவி மற்றும் மகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கொடுத்த பணத்தை வாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட மணிகண்டன் குடும்பத்தினரின் புகாரி அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பழனியை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
புதிய தொழிலில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு…
சின்னத்திரை நடிகை மன்யா ஆனந்த், நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயஸ் தன்னை ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக தொடர்புகொண்டு, ஒப்பந்தம் செய்ய…
வெற்றிகரமான படங்களைத் தந்த இயக்குநர் மு.களஞ்சியம் நடிகர் கார்த்திக் தனது திரைப்படத்தில் நடித்தபோது கொடுத்த தொல்லைகள் குறித்துப் பேட்டி ஒன்றில்…
சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த வீடியோவில், இரண்டு குழந்தைகள் ஒரு பாம்புடன் ஒரு…
உத்தரபிரதேசத்தின் பிஜ்னோரில் பாம்பு கடித்த ஒருவர், உயிருள்ள பாம்பைப் பிடித்து, சீக்கிரம் அடையாளம் காண மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, தனது…
குஜராத்தின் அர்வல்லி மாவட்டத்தில் உள்ள மொடசா நகரம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததில், புதிதாகப் பிறந்த குழந்தை,…