அட, இந்த காலத்துல இப்படி ஒரு மாப்பிளையா?…. திருமணத்திற்கு முன்பு விபத்தில் சிக்கிய மணமகள்… மருத்துவமனைக்கே சென்று மணமகன் செய்த நெகிழ்ச்சி செயல்…!

Spread the love

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் அருகே உள்ள முதலச்சேரி பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் என்பவருடைய மகள் ஆவணி (25). தனியார் பள்ளி ஆசிரியை யான இவருக்கும் தும்போலி பகுதியை சேர்ந்த இன்ஜினியரிங் கல்லூரி பேராசிரியர் ஷாரோன்(32) என்பவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடந்து கொண்டிருந்த நிலையில் நேற்று இவர்களுடைய திருமணம் ஆழப்புழாவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது.

இதனிடையே மணமகள் ஆவணி அலங்காரம் செய்வதற்காக அவருடைய அத்தையுடன் அருகே உள்ள அழகு நிலையத்திற்கு காரில் சென்றுள்ளார். காரை மணமகள் ஓட்டி சென்ற நிலையில் செல்லும் வழியில் கார் மரத்தின் மீது மோதி எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆவணி மற்றும் அவருடைய அத்தை படுகாயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து விபத்தில் படுகாயம் அடைந்த இரண்டு பேரையும் எர்ணாகுளம் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனைக் கேட்டு பதறிப் போன குடும்பத்தினர் மற்றும் மணமகன் ஆகியோர் பதறி அடித்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர். அங்குதான் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தது. அதாவது மணமகன் மருத்துவமனைக்குச் சென்று மணமகள் ஆவணிக்கு தாலி கட்டினார். இருந்தாலும் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மண்டபத்திற்கு வந்தவர்களுக்கு அங்கிருந்தவர்கள் விருந்து உபசரித்தனர். இப்படி ஒரு சம்பவம் இணையத்தில் வெளியாகி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Nanthini

Recent Posts

அதிகாலையில் நடந்த கோர விபத்து… நொறுங்கிய கார், சிதறிய உயிர்கள்… ஓட்டு போட சொந்த ஊர் வந்த போது பரிதாபம்….!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…

2 minutes ago

இப்பவே வரலன்னா குழந்தையை வீசிடுவேன்…!” மனைவியை மிரட்டி தந்தையே செய்த கொடூரம்… 5 மாதக் குழந்தை பலி… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…

11 minutes ago

காலையிலேயே இந்தியர்களுக்கு குட் நியூஸ்… “அமெரிக்கா வழங்கும் ₹13,80,000,000,000 ரீபண்ட்”… டிரம்பின் அதிரடி முடிவு….!

அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…

36 minutes ago

“ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சிருக்கலாம்..” குழந்தைகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கிணற்றில் குதித்த தாய்.. நடந்தது என்ன..? அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…

43 minutes ago

“ஏப்ரல் 23 வாக்குப்பதிவு”… ஓட்டு போட போறீங்களா?… இந்த தப்பு மட்டும் செஞ்சிடாதீங்க…. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை….!

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…

56 minutes ago

“ஸ்டாலினுக்கு ‘கதம் கதம்’.. 10 முறை தோற்ற சேலத்துக்காரர்”… “பாஜக காலில் விழும் திமுக!” – கருத்துக் கணிப்புகளை கிழித்துத் தொங்கவிட்ட தளபதி விஜய்!….!

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆளும் திமுக…

1 மணத்தியாலம் ago