சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஜெயராமன் பகுதியைச் சேர்ந்தவர் ஜியாவுல்லா (32). இவர் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று வேலைக்குச் செல்வதற்காக வண்ணாரப்பேட்டை கல்லறைச் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது, சுங்கச்சாவடியிலிருந்து திருவான்மியூர் நோக்கிச் சென்ற 6D மாநகரப் பேருந்து மோதி உயிரிழந்ததாக ஆரம்பத்தில் கூறப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்துப் புலனாய்வு போலீசார் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பேருந்தின் ஓட்டுநர் திருநாவுக்கரசு என்பவரை விசாரணைக்காகக் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிவந்தது. 6D மாநகரப் பேருந்து கல்லறைச் சாலையில் திரும்பியபோது, அதைப் பார்த்த ஜியாவுல்லா, ஓடிச் சென்று பேருந்தின் பின் சக்கரத்தில் தனது தலையை வைத்துத் தற்கொலை செய்து கொண்டது தெளிவாகப் பதிவாகி இருந்தது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த…
மே 13 அன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள்…
ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் உள்ள ரீங்கஸ் - காடூ ஷ்யாம் பிரதான சாலையில் பெரும் விபத்து ஒன்று நொடிக்…
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களத்தில் அரசியல் சூடுபிடித்துள்ள சூழலில், அம்பாசமுத்திரம் தொகுதியில்…
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஐ.எஸ்.ஐ ஆதரவு பெற்ற ஷெஹ்சாத் பாட்டி தலைமையிலான தீவிரவாத வலைப்பின்னல், இந்திய இளைஞர்களை இலக்கு வைத்து…