சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆளும் திமுக அரசு மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தற்போதைய திமுக அரசை “மக்களைக் கண்டுகொள்ளாத ஆட்சி” என்று விமர்சித்த அவர், இந்தத் தேர்தல் ஸ்டாலின் அவர்களை வீட்டிற்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம் என்றும், தமிழகத்தை திமுகவிடமிருந்து காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பதாகவும் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். மேலும், பொய் வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்றி, தமிழகத்தின் கடன் சுமையை வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தியதே திமுகவின் சாதனை என அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.
தொடர்ந்து பேசிய விஜய், தவெகவின் அரசியல் எதிரி திமுக என்றும், கொள்கை எதிரி பாஜக என்றும் தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திட்டமிட்டு பரப்பப்படும் “கடுப்பில் கணிப்புகள்” என்று சாடிய அவர், தோல்வி பயத்தில் இருக்கும் திமுக, தனது கட்சியைக் காப்பாற்றிக் கொள்ள பாஜகவின் காலில் விழும் சூழல் ஏற்படும் என்றும் ஆணித்தரமாகக் கூறினார். பாஜகவின் அடிமையாக இருப்பதில் திமுக மற்றும் அதிமுக இடையே போட்டி நிலவுவதாகக் குறிப்பிட்ட அவர், மம்தா பானர்ஜி கூறியது போல இவர்கள் காவி வேடமிட்டு மறைமுகக் கூட்டணியில் ஈடுபட்டு வருவதாக விமர்சித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை “10 முறை தோற்ற சேலத்துக்காரர்” என்று நேரடியாகச் சாடிய விஜய், சொந்தத் தொகுதியைத் தாண்டி வேறு எங்கும் போட்டியிடத் துணிவில்லாதவர் தன்னைப் பற்றி விமர்சிக்கத் தகுதியற்றவர் என்றார். தவெகவின் “விசில்” சின்னத்தை அதிமுகவினர் திருடிக் கொண்டதாகக் குற்றம் சாட்டிய அவர், எடப்பாடி பழனிசாமியின் தொகுதியில் மட்டும் தவெக ஆதரவு சின்னமான “டிவி” சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று தொண்டர்களைக் கேட்டுக்கொண்டார். 75 வருட மற்றும் 55 வருட பாரம்பரியம் பேசும் கட்சிகளை மக்கள் இந்தத் தேர்தலில் தூக்கி எறிய வேண்டும் என்பதே தனது இலக்கு என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
இறுதியாக, சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்து இழுக்கும் வகையில் பேசிய விஜய், தனது “குட்டி நண்பா, நண்பிகளிடம்” ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். தமிழகம் ஜெயிக்கவும், உங்கள் விஜய் மாமா வெற்றிக்காகவும் வீட்டில் உள்ள அனைவரையும் “விசில்” சின்னத்திற்கு வாக்களிக்கச் சொல்லுமாறு கேட்டுக்கொண்டார். மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையில் தான் 100 சதவீதம் உறுதியாக இருப்பதாகவும், அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்வதே தனது அடையாளம் என்றும் கூறி, வரும் தேர்தலில் வாகை சூடும் வரலாறு திரும்பப் போவது உறுதி எனத் தனது உரையை நிறைவு செய்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…