புதுச்சேரி திருபுவனை கலித்தீர்த்தாள்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி அன்பரசி, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 517 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். அதைத் தொடர்ந்து, எந்தவித தனியார் பயிற்சி மையங்களின் உதவியுமின்றி சுயமாகவும், பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடனும் நீட் தேர்வுக்குத் தயாராகி 437 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்பை அவர் உறுதி செய்துள்ளார்.
தந்தையை இருதய நோயால் இழந்து வறுமையில் வாடிய குடும்பத்தைக் காப்பாற்ற, அன்பரசியின் தாய் பானிப்பூரி விற்பனை செய்து வந்தார். குடும்பச் சூழலைப் புரிந்து கொண்ட அன்பரசி, தினமும் பள்ளி நேரம் முடிந்ததும் மாலையில் பானிப்பூரி கடையில் தாயாருக்கு உதவியாகப் பணியாற்றிவிட்டு, இரவு நேரங்களில் விழித்திருந்து படித்து இந்த சாதனையை எட்டியுள்ளார். வருங்காலத்தில் மருத்துவராகி ஏழை மற்றும் எளிய மக்களுக்கு குறைந்த செலவிலும் இலவசமாகவும் மருத்துவச் சேவை வழங்குவதே தனது லட்சியம் என அவர் கூறியுள்ளார்.
மாணவி அன்பரசியின் விடாமுயற்சியைப் பாராட்டி சமூக சேவகர்கள் நாராயணசாமி மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர். மேலும், அவருக்கு டாக்டர் கோட், ஸ்டெதஸ்கோப் மற்றும் மருத்துவப் புத்தகங்களைப் பரிசாக வழங்கினர். புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கத்தின் சார்பில், அன்பரசியின் முழு மருத்துவக் கல்விக்கான நிதியுதவியையும் ஏற்றுக்கொள்வதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, ஹைதராபாத்தின் பேகம்பஜார் ஃபீல்ட் கானாவில் நிறுவப்பட்டுள்ள 48 கிலோ எடை கொண்ட தங்க விநாயகர் சிலை…
துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை 2026 இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாம்பியன்…
டெல்லியில் தொழிலாளியாகப் பணிபுரியும் ஒருவரின் மனைவி, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் காதலில் விழுந்துள்ளார். கணவர் இல்லாத நேரத்தில்…
ஹைதராபாத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஜோடிக்கு உதவியதற்காக, கார்த்திக் என்ற வாலிபர் விநாயகர் மண்டபத்தில் வைத்து ரவுடிகளால் கொடூரமாகக்…
புதுடெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் கலந்துகொண்ட அபுதாபி இளவரசர் ஷேக் காலித்…
குடும்பத்தினரின் கனவெல்லாம் இளைய மகன் பெரிய வியாபாரியாக வர வேண்டும் என்பதுதான். ஆனால், காளுவோ தன் விருப்பப்படியே ஒரு கன்னிகை…