திருப்பூர் ஓம் சக்தி கோவில் சாலை பகுதியிலுள்ள ஸ்டேட் பேங்க் காலனியில், மணி என்ற தெரு நாய் காட்டிய நட்பின் ஆழம் அனைவரின் நெஞ்சையும் கலங்க வைத்துள்ளது. விலங்குகள் வெறும் பசி, இயல்பூக்கத்தால் மட்டுமே இயங்குபவை என்ற பொதுவான பிம்பத்தை உடைக்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்துள்ளது. மனிதர்களைப் போலவே நாய்களுக்கும் மகிழ்ச்சி, பயம், பொறாமை மற்றும் ஆழ்ந்த துக்கம் போன்ற உணர்வுகள் உண்டு. தனியாக வாழ்வதை விடக் கூட்டமாக வாழ விரும்பும் நாய்கள், தன்னுடன் சுற்றித் திரியும் சக நாயையே தன் சொந்தக் குடும்பமாகவும் பாதுகாப்பு உணர்வாகவும் கருதுகின்றன.
இந்நிலையில், மணியுடன் எப்போதும் ஒன்றாகச் சுற்றித் திரியும் மற்றொரு தெரு நாய், வீட்டின் சுற்றுச்சுவர் ஓரத்தில் உயிரிழந்து கிடந்தது. தன் நண்பன் அசையாமல் இருப்பதையும் அவனது வாசனையையும் வைத்து, அவர் இறந்துவிட்டதை மணி உணர்ந்து கொண்டது. நண்பனின் பிரிவைத் தாங்க முடியாமல், அந்த உடலை விட்டுச் சிறிதும் நகரமால், ஒரு நாள் முழுவதும் அதன் அருகிலேயே சோகத்துடன் அமர்ந்திருந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இறந்த நாயின் உடலை அடக்கம் செய்ய முயன்ற போதும், மணி அமைதியாகவே அதன் அருகிலேயே நின்றது.
உயிர் பிரியும் வரை மட்டுமல்ல, அடக்கம் செய்யும் வரை நட்பு என்பதை மணி நிரூபித்தது. மாநகராட்சி மயானம் வரை சென்று, நண்பனின் உடல் அடக்கம் செய்யப்படும் இடம் வரை துணையாக நின்று தனது கடைசி கடமையைச் செய்தது. “நட்பின் கடைசி காவல்” என்பதை உணர்த்திய மணியின் இந்தச் செயல், விலங்குகளுக்குள் இருக்கும் அளப்பரிய பாசத்தையும், உணர்வுப்பூர்வமான நட்பின் ஆழத்தையும் மனிதர்களுக்கு உணர்த்தும் மாபெரும் படிப்பினையாக மாறியுள்ளது.
பத்ராவதியின் நாகசேனா நகரில் பயிற்சி வகுப்பு முடிந்து மிதிவண்டியில் வீடு திரும்பிய 8 வயது சிறுவன் மீது, 17 வயது…
ஹோட்டலின் ஏழாவது மாடியில் எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சோக சம்பவம், அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 26 வயதான ரிஹானா என்ற…
ஆக்ராவில் பட்டப்பகலில் பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம், ஆளும் கட்சியின் செல்வாக்கு எந்த அளவிற்குச் சட்டத்தையும் நீதியையும்…
செவ்வாய்க்கிழமை அதிகாலையில் படாங்காஸ் மாகாணத்தில் உள்ள லிபா நகரில் அமைந்துள்ள ஒரு பேக்கரிக்குள் ஏழு பேர் கொண்ட கும்பல் அத்துமீறி…
தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட் மாவட்டம், மார்க்குகு மண்டலத்தைச் சேர்ந்த போத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயதான ராம் சரண். இவர்…
கன்னோஜ் மாவட்டம் குர்சஹாய்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில், 32 வயதான சஞ்சீவ் குமார் மற்றும் அவரது மனைவி ஷிகா ஆகியோர்…