கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில், நில இழப்பீடு வழங்க அரசு அதிகாரிகள் தொடர்ந்து தாமதம் செய்ததால் ஆத்திரமடைந்த பசப்பா தொட்டமணி என்ற விவசாயி, அரசு அதிகாரியை செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணா நதி நீர் திட்டத்திற்காக அந்த விவசாயியின் நான்கு ஏக்கர் விவசாய நிலம் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பே கையகப்படுத்தப்பட்டது. இதற்கான பட்டாக்கள் வழங்கப்பட்ட போதிலும், உரிய இழப்பீட்டுத் தொகை தமக்கு வந்து சேராததால், அவர் பாகல்கோட் நகர மேம்பாட்டு ஆணைய அலுவலகத்திற்குப் பலமுறை அலைந்துள்ளார்.
https://twitter.com/sunnewstamil/status/2066722054209155510/video/1
தொடர் இழுத்தடிப்பு மற்றும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் விரக்தியடைந்த விவசாயி, அரசு அலுவலகத்தில் அதிகாரியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த காரசாரமான விவாதத்தின் போது, பொறுமை இழந்த விவசாயி தனது செருப்பைக் கழற்றி அங்கிருந்த முதன்மை நிலை எழுத்தர் நீலகாந்த் அன்காத் என்ற அதிகாரியை ஓங்கி அடித்தார். இந்த மோதல் மற்றும் தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, அரசு அதிகாரிகளின் ஊழல் மற்றும் நிர்வாகத் தாமதங்கள் குறித்த விவாதங்களை நாடு முழுவதும் கிளப்பியுள்ளது.
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மனைவியின் முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில், இருவரையும் சமாதானம் செய்யச் சென்ற நண்பர்…
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்லியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஷிகா…
கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…
நீலகிரி மாவட்டம் பில்லூர்மட்டம் சடையன் கொம்பை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனதாக கடந்த…
டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…
சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…