“Go Back Modi”… திருப்பரங்குன்றம் உங்களை வரவேற்கவில்லை… மதுரையில் பரபரப்பு போஸ்டர்…. அதிர்ச்சியில் பாஜக….!

Spread the love

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், அதிமுக – பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் இன்று மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகவும், பல்வேறு அரசு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுரைக்கு வருகை தருகிறார். இதற்காக மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

பிரதமரின் வருகையை முன்னிட்டு மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ‘Go Back Modi’ (திரும்பிப் போ மோடி) என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, “திருப்பரங்குன்றம் உங்களை வரவேற்கவில்லை” மற்றும் “மத ரீதியான மூளைச்சலவை வேண்டாம்” போன்ற கடுமையான வாசகங்கள் அந்த போஸ்டர்களில் இடம்பெற்றுள்ளன. இந்த போஸ்டர்கள் மதுரை முழுவதும் பரவலாகக் காணப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தனது பயணத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி இன்று பிற்பகல் மதுரை வந்தடைகிறார். அங்கு சுமார் 4,400 கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை அவர் தொடங்கி வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் அவர், மாலையில் மண்டேலா நகர் பகுதியில் நடைபெறும் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். ஒருபுறம் பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடுகள் நடைபெற்று வரும் வேளையில், மறுபுறம் எதிர்க்கட்சியினர் ஒட்டியுள்ள எதிர்ப்பு போஸ்டர்கள் மதுரையில் அரசியல் ரீதியாகப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

Nanthini

Recent Posts

“தவெக அமைச்சரவையில் மாற்றம்”…. ஜூனியர்களுக்கு கல்தா?… விஜய் கையில் எடுத்த ‘ஆபரேஷன் சீனியர்ஸ்’…. பதறவைக்கும் கோட்டை வட்டார ரகசியங்கள்….!

தமிழக அரசியல் களம் தற்போது இடைத்தேர்தல் மோடிற்குள் நுழைந்துள்ள நிலையில், கோட்டை வட்டாரங்களில் அமைச்சரவை மாற்றம் குறித்த விவாதங்கள் அனல்…

49 seconds ago

“வரலாற்றில் முதல்முறை… சிபாரிசு, பணம் இல்லாமல் நடந்த 215 அதிகாரிகள் டிரான்ஸ்பர்”…. தமிழக பத்திரப்பதிவு துறையில் அதிரடி மாற்றம்….!

தமிழக பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவிற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக, முற்றிலும் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் 215…

9 minutes ago

தவெகவில் இணைந்த 6 முன்னாள் அதிமுக MLA-க்கள்…. இத்தனை கோடி சொத்தா?…. வாயடைத்துப்போன அரசியல் களம்….!

அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள 6 முன்னாள் எம்.எல்.ஏ-க்களின் சொத்து விவரங்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக…

18 minutes ago

தமிழக பெண்களுக்கு ஷாக் நியூஸ்…. ரேஷன் கார்டில் தவெக அரசு செய்யப்போகும் அதிரடி மாற்றம்… இனி ‘இவர்களுக்கு’ மகளிர் உரிமைத் தொகை கிடையாது….?

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்', தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத்…

29 minutes ago

வேலுமணி, சண்முகத்திற்கே வேட்டு வச்ச இபிஎஸ்… ஆனா ‘அவருக்கு’ மட்டும் ஸ்பெஷல் சலுகை…. அதிமுகவை உலுக்கும் ஒரே ஒரு பெண் எம்.எல்.ஏ…. லீமா ரோஸ் விவகாரத்தின் ‘அக்மார்க்’ அரசியல் ரகசியம்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து வரும் வேளையில், அதிமுகவில் உட்கட்சி ஒழுங்கு நடவடிக்கை…

41 minutes ago

தவெக vs திமுக: முதல்வரின் முதல் பயணத்திற்கே வந்த சோதனை… கரூருக்கு கிளம்பும் முன்பே விஜய்க்கு விழுந்த முட்டுக்கட்டை… புதிய பரபரப்பை கிளப்பிய திமுக….!

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். கடந்த…

48 minutes ago