#image_title
தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு என ஒரு பல்துறை வித்தகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மூன்றாம் பிறை, நாயகன் மற்றும் இந்தியன் ஆகிய மூன்று திரைப்படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.
தன்னுடைய படங்களில் திறமையானவர்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் கமல்ஹாசன் ஆர்வமாக இருப்பார். அதுபோல திறமையானவர்களைக் கண்டால் அவர்களுக்கான வாய்ப்புகளை எப்படியாவது தன்னுடைய கம்பெனியில் கொடுக்கவேண்டும் என ஆசைப்படுவார்.
அப்படி திறமையும் இளமையுமாக இருந்த கௌதம் மேனனை தன்னை ஒரு படத்தில் இயக்க அமர்த்தினார். முதலில் கமல்ஹாசன் தசாவதாரம் கதையைதான் கௌதமை இயக்க அழைத்துள்ளார். ஆனால் அந்த கதை தனக்கு ஒத்து வராது என்பதால் கௌதம் விலகிக் கொள்ளவே அவர் கதையில் கமல் நடித்த படம்தான் வேட்டையாடு விளையாடு.
இந்த படம் பல தடங்கல்களைத் தாண்டி 2 ஆண்டுகள் உருவாக்கத்தில் இருந்து ஒருவழியாக 2006 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆனபின்னர் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கமல்ஹாசனின் ரசிகரான கௌதம் மேனன், அவரை செதுக்கி ரசிகர்கள் கொண்டாடும் விதமாகக் காட்டியிருந்தார். தமிழ் சினிமாவில் வந்த தனித்துவமுள்ள ஸ்டைலிஷான போலீஸ் படங்களில் வேட்டையாடு விளையாடு திரைப்படத்துக்கு எப்போது முதலிடம் உண்டு.
#image_title
இந்த படத்தில் இன்றளவும் ரசிகர்கள் ரசித்துக் கொண்டாடும் காட்சிகளில் ஒன்று கமல்ஹாசனின் அறிமுகக் காட்சி. அந்த காட்சி பற்றி ஒரு நிகழ்ச்சியில் சமீபத்தில் கௌதம் மேனன் பேசினார். அப்போது “ நான் ஒரு ரசிகராக வேட்டையாடு விளையாடு படத்தை எடுத்தேன். அந்த அறிமுகக் காட்சியில் கண்ணைத் துருத்தி காட்டுவதெல்லாம் நான் சொல்லவேயில்லை. அதைக் கமல் சார் ஸ்பாட்டில் அவராகவே செய்தார். அதை அப்படியே நாங்கள் கேமராவில் பதிவு செய்தோம். இன்றளவும் அது கொண்டாடப்படுகிறது.” என தெரிவித்துள்ளார்.
கோவையில் புதைக்கப்பட்ட மீன் வியாபாரியின் உடலைத் தோண்டி எடுத்து, அவரது கழுத்தில் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க…
கூட்டுறவுச் சங்கங்களில் பொறுப்பு வகித்த விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது என்ற தமிழக அரசின் புதிய கட்டுப்பாடு விவசாயிகள் மத்தியில்…
ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மோசடி விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் தமிழகம் முழுவதும் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி,…
தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…
கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…