பீகாரில் பயங்கரம்… கணவனை அறையில் பூட்டிவிட்டு… 5 பேர் கொண்ட கும்பலின் கூட்டு பாலியல் வன்கொடுமை… பெண்ணின் உடலில் இருந்து அகற்றப்பட்ட துப்பாக்கித் தோட்டா… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

Spread the love

பீகார் மாநிலம் பெகுசாராய் பகுதியில் உள்ள சாக்கியா காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தில், கடந்த ஜூன் 11 அன்று நள்ளிரவில் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளது. அங்கு இருந்த கணவரை ஒரு தனி அறையில் அடைத்துவிட்டு, கழிவறையில் இருந்து வெளியே வந்த அவரது மனைவியின் வாயைப் பொத்தி, ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்குக் கடத்திச் சென்றுள்ளனர். அந்தப் பெண் சத்தம் போட முயன்றபோது, பிளேடால் அவரது மார்பு மற்றும் தொடைப் பகுதிகளில் வெட்டி சித்ரவதை செய்து, ஐந்து பேரும் சேர்ந்து அவரை கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் தனது நாத்தனார் உதவியுடன் கணவரை மீட்டு, காவல்துறையினருக்குத் தகவல் அளித்துவிட்டு சர்தார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். எனினும், அவரது பிறப்புறுப்பில் தொடர்ந்து தாங்க முடியாத கடுமையான வலி இருந்ததால் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது பிறப்புறுப்பில் இருந்து துப்பாக்கித் தோட்டா, கல் மற்றும் மரக்கட்டை உள்ளிட்ட பொருள்களை அகற்றியுள்ளனர். சித்ரவதையின்போது சுயநினைவிழந்ததால் தமக்கு இதுகுறித்து தெரியவில்லை எனப் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பும் ஒரு கும்பல் தங்களது வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாகவும், அதுகுறித்து காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். தற்போதைய சம்பவம் குறித்துப் பேசிய டிஎஸ்பி ஆனந்த் குமார் பாண்டே, பெண்ணின் வாக்குமூலமும், பிறப்புறுப்பில் இருந்து தோட்டா அகற்றப்பட்டதும் உண்மைதான் என்று உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், தலைமறைவாக உள்ள 5 குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Swetha

Recent Posts

ஐரோப்பாவை நடுங்க வைக்கும் ‘ஒமேகா பிளாக்’… இந்திய பருவமழையை காலி செய்யப் போகிறதா… அதிர்ச்சித் தகவல்…!

தற்போது பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கோடை வெயில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி, வரலாறு காணாத…

10 minutes ago

இவன் மனிதனே இல்லை…! இரண்டு லாரிகளுக்கு நடுவே புகுந்த ‘மரண ஓவர்டேக்’… சோசியல் மீடியாவை உலுக்கும் ஷாக்கிங் வீடியோ…!!

சமூக வலைத்தளமான 'X' தளத்தில் சுமன் ரஸ்தோகி என்பவரால் பகிரப்பட்ட அதிர்ச்சியூட்டும் லாரி விபத்து வீடியோ ஒன்று தற்போது இணையத்தில்…

14 minutes ago

முடியலடா சாமி..! கொளுத்தும் வெயிலுக்குப் பயந்து… கடையிலேயே பாயை விரித்த மக்கள்… பிரம்மாண்ட பர்னிச்சர் கடையை ஆக்கிரமித்த பொதுமக்கள்… நெட்டிசன்கள் வியப்பு..!!

ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள மக்கள் தங்களின் வீடுகளை…

17 minutes ago

டெல்லி ஜந்தர் மந்தரில் நடக்கும் போராட்டத்தால் அரசுக்கு வந்த உச்சக்கட்ட நெருக்கடி… மாணவர்களுக்காக உயிரை பணயம் வைக்கும் சோனம் வாங்சுக்… தீவிரமடையும் உண்ணாவிரதம்…!

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி…

23 minutes ago

“தண்ணீரைத் திறந்து வைத்தும் தப்ப முடியாத மரணப் பொறி…!” தீ விபத்தில் குளியலறைக்குள் முடங்கிய குஜராத் குடும்பத்திற்கு நேர்ந்த கொடூரம்…!

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள வூஸ்டர் நகரில் செயல்பட்டு வரும் எகானோ லாட்ஜ் என்ற மோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ…

29 minutes ago

ஹேப்பி மூட்…! கிரிக்கெட் ஸ்டார்ஸ் கிடையாது… இப்போ நாங்க ஸ்கூல் பிரண்ட்ஸ்…! இணையத்தைக் கொள்ளையடிக்கும்… சஞ்சு சாம்சனின் கியூட் வீடியோ…!!

இந்திய கிரிக்கெட் வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் பயணத்தின் போது 'பென் ஃபைட்' விளையாடும் வீடியோ…

30 minutes ago