Connect with us

CINEMA

புற்றுநோயிலிருந்து மீண்ட 4500 பேருக்கு லியோ படம்…. தனியார் மருத்துவமனை செய்த நெகிழ வைக்கும் சம்பவம்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. தமிழக மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.

   

இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித்குமார் தயாரித்திருக்கின்றார். அனிருத் இசை அமைத்திருக்கின்றார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை மேலும் கவர்ந்திருக்கின்றது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கின்றார். அதைத்தொடர்ந்து கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மிஸ்கின், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, பிரியா ஆனந்த், மடோனா ஜெபாஸ்டின் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்திருக்கின்றது.

லியோ திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 148 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இதுவரை 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த திரைப்படம் தொடர்பாக பெரும்பாலானோர் நேர்மறையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் மட்டுமே எதிர்மறையான கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

அதாவது திரைப்படத்தில் சண்டைக் காட்சிகள் வேகத்தை இழுப்பதாக கூறி இருக்கிறார்கள். எது எப்படியோ படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிஸில் முக்கிய இடத்தை பிடித்திருக்கின்றது. இதற்கு இடையில் சென்னை தனியார் மருத்துவமனையில் புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள், குடும்பத்தினர், மருத்துவர்கள், செவிலியர், ஊழியர்கள் என மொத்தம் 4500 பேருக்கு விஜய் நடித்த லியோ திரைப்படத்திற்கான இலவச டிக்கெட்கள் வழங்கப்பட்டுள்ளது. டிக்கெட் மட்டுமல்லாமல் அதனுடன் சேர்ந்து உணவுகளுக்கான கூப்பன்களும் வழங்கப்பட்டுள்ளன. பில்ரோத் மருத்துவமனையின் இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

author avatar
Mahalakshmi
Continue Reading

More in CINEMA

To Top