இளம்பெண்களை காதல் மொழி பேசி ஏமாற்றி கூகுள்பே மூலம் ரூ. 20 லட்சம் வரை அபகரித்து மோசடி செய்த சென்னை வாலிபர் – கைது செய்த திண்டிவனம் போலீசார்!

Spread the love

இளம்பெண்களை ஏமாற்றி கூகுள்பே மூலம் 20 லட்சம் வரை சுருட்டிய காதல் மன்னனை போலீசார் கைது செய்தனர். டாக்டர் இன்ஜினியர் என ஏமாற்றி திருமணம் செய்வதாக மோசடி செய்த வாலிபர் வசமாக சிக்கினார். இதுவரை 20 பெண்களிடம் 20 லட்சம் ரூபாய் வரை பறித்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. திருமண தகவல் மையம் மூலமாக பல பெண்களை தொடர்பு கொண்டு டாக்டர் இன்ஜினியர் என பொய் பேசி ஏமாற்றியிருக்கிறார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் திருமண தகவல் மையம் மூலமாக பதிவு செய்திருக்கிறார். அப்போது சென்னை பூந்தமல்லி பகுதியை சேர்ந்த அருள்மொழி என்ற இளைஞர் அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். நாளடைவில் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்ட நிலையில், 12 லட்சம் ரூபாய் வரை அந்தப் பெண்ணிடம் கூகுள் பே மூலம் அருள்மொழி பெற்றிருக்கிறார்.

ஆனால் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்யாமல் பல நாட்களாக ஏமாற்றி வந்திருக்கிறார். இதுகுறித்து அந்த இளம் பெண் திண்டிவனம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி அந்த இளைஞரை கைது செய்தனர். அப்போதுதான் அவர் டாக்டர் இன்ஜினியர் என்று சொல்லி திருமண தகவல் மையம் மூலமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி 20 லட்சம் ரூபாய் வரை பறித்தது தெரிய வந்தது.

இவர் பெண்களிடம் காதல் மொழி பேசிப் பழகி பணத்தைப் பறித்துக் கொண்டு நாளடைவில் அவர்களை ஏமாற்றி விடுவதும் தெரியவந்தது. போலீசார் அந்த வாலிபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இளம் பெண்கள் இது போன்ற விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மோசடி நபர்களிடம் ஏமாறக் கூடாது என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

Elango

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

5 மணத்தியாலங்கள் ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

6 மணத்தியாலங்கள் ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

6 மணத்தியாலங்கள் ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

6 மணத்தியாலங்கள் ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

6 மணத்தியாலங்கள் ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

6 மணத்தியாலங்கள் ago