மும்பையில் வசிக்கும் பலருக்கு, “உங்கள் கேஸ் கனெக்ஷன் இன்றிரவு துண்டிக்கப்படும்” என்ற குறுஞ்செய்தி (SMS) அனுப்பப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றம் காரணமாக எரிவாயு விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அதைச் சரிசெய்ய உடனடியாக ஒரு செயலியை (App) பதிவிறக்கம் செய்ய வேண்டும் அல்லது குறிப்பிட்ட எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது. இதைக் கண்டு பயந்த பொதுமக்கள் பலரும் அந்த மோசடிப் வலையில் விழுந்துள்ளனர்.
மோசடி நபர்கள் அனுப்பிய லிங்க்கை கிளிக் செய்தவுடன், பயனர்களின் செல்போன்கள் அவர்களின் கட்டுப்பாட்டிற்குச் சென்றுள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கு விவரங்களை திருடிய மர்ம நபர்கள், லட்சக்கணக்கான ரூபாயைச் சுருட்டியுள்ளனர். போரின் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற பொதுமக்களின் இயல்பான அச்சத்தை இந்த மோசடி கும்பல் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள மகாநகர் கேஸ் லிமிடெட் (MGL) மற்றும் சைபர் கிரைம் போலீஸார், இது போன்ற குறுஞ்செய்திகளை நம்பி எந்த ஒரு லிங்க்கையும் கிளிக் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். அதிகாரப்பூர்வமான கேஸ் நிறுவனங்கள் ஒருபோதும் குறுஞ்செய்தி மூலம் தனிப்பட்ட தகவல்களையோ அல்லது பணத்தையோ கோருவதில்லை என்றும், ஏதேனும் சந்தேகம் இருந்தால் நேரடியாக நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…