#image_title
கேரளா அதன் வளமான கலாச்சாரம் மற்றும் சுவையான உணவுகளுக்கு பெயர் பெற்றது. கேரளாவின் கோழிக்கோடு பாரம்பரிய இனிப்புகளின் தேசமாக கூறப்படுகிறது. அதில் முக்கியமானது அல்வா. அல்வா என்றால் யாருக்கு தான் பிடிக்காது. கோழிக்கோடு அல்வாவை மையமாக வைத்து நான்கு கேரள நண்பர்களால் தொடங்கப்பட்டது தான் Fulva. இது எப்படி தொடங்கப்பட்டது என்பதை பற்றி இனி காண்போம்.
Fulvaவின் தலைமை நிர்வாக அதிகாரியும் மூளையும் ஆன ஷமாஸ் அகமது காஷ்மீருக்கு பயணம் செல்லும் போது கோழிக்கோடு அல்வாவை பாரம்பரியமாக செய்யும் குடும்பத்தை சந்தித்தார். மறுமுறை வரும்போது இதை விரிவுபடுத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துக் கொண்டு திரும்பி வந்தார். மறுமுறை அவர் அங்கே செல்லும்போது அல்வாவை பார்க்கும் போது அதிர்ச்சி அடைந்தார்.
ஷமாஸ் அதிர்ச்சி அடைந்ததற்கான காரணம் என்ன தான் சுவையான அல்வா இருந்தாலும் அதன் மோசமான பேக்கேஜிங் மற்றும் தரத்தினால் அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. பாரம்பரியமான கோழிகோடு அல்வாவை தரமான பேக்கேஜில் செய்து கொடுக்கும் போது அதனுடைய விற்பனை பெருகும் என்று யோசித்தார்.
கோழிகோடு அல்வாவை சாதாரண பேக்கேஜிங் கொண்டு விற்கப்படுவதனால் அது வெளியூர் பயணங்களுக்கு பொருந்தாமல் இருந்தது. அதனால் ஷமாஸ் தரமான பேக்கேஜிங் இல் சுகாதாரமான கோழிக்கோடு பாரம்பரிய அல்வாவை விற்பனை செய்ய வேண்டும் என்ற முடிவெடுத்தார். தனது குழந்தை பருவ நண்பர்களான சானு முகமது, தஷ்ரீப் அலி மற்றும் இர்பான் சஃபர் மாசுரை அணுகி தனது ஐடியாவை கூறி Fulvaவை ஆரம்பித்தனர்.
அடுத்ததாக Fulvaவை எந்த முறையில் அல்வாவை பேக்கேஜிங் செய்வது என்பதை திட்டமிட்டனர். சிறந்த பேக்கேஜிங்காக அல்வாவை துண்டு துண்டாக வெட்டுவதற்கு முடிவு செய்து ஒரே பேக்கேஜில் 12 வகை மற்றும் 24 வகையான சுவை கொண்ட அல்வாவை விற்பனை செய்ய முடிவு எடுத்தனர். அதற்கான பிரச்சாரத்தையும் விளம்பரத்தையும் கூடவே செய்தனர். முதலில் இந்த Fulva அல்வா பாக்ஸை கடற்கரையில் மாணவர்கள் விற்பனை செய்தனர். ரமலான் மாதத்தில் ஆரம்பித்ததால் நோன்பு முறித்துக் கொள்ள இந்த அல்வா பிரபலமானது.
அடுத்ததாக மார்க்கெட்டிங் மூலம் மக்களிடையே Fulva வை பிரபலப்படுத்திய ஷமாஸ் முதல் வருடம் 48 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டினார். இப்போது உலகம் எங்கிலும் 25 ஆயிரம் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் Fulva வை விரும்பி வாங்குகின்றனர். இது உற்பத்தியாளர்கள் டூ வாடிக்கையாளர்கள் என நேரடி விற்பனையில் Fulva விற்பனை ஆகி வருகிறது. கோழிக்கோடு அல்வாவை சிறந்த பேக்கேஜில் கொடுக்க வேண்டும் என்ற சிறிய ஐடியாவின் மூலம் ஆண்டுக்கு 84 லட்சம் வருவாய் ஈட்டி வருகின்றனர் கேரளத்தை சேர்ந்த 4 நண்பர்கள்.
தற்காலச் சூழலில் ஏசி (Air Conditioner) என்பது ஆடம்பரப் பொருள் என்ற நிலையிலிருந்து மாறி அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. பிப்ரவரி மாதத்திலிருந்தே…
தமிழகத் திரையுலகில் நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளராகவும், 'புலி' படத்தின் தயாரிப்பாளராகவும் அறியப்படுபவர் பி.டி. செல்வகுமார். விஜய்யுடன் 'கோயமுத்தூர் மாப்பிள்ளை'…
கொசுக்களிடம் இருந்து தப்பிக்க ஒரு செக்யூரிட்டி கார்டு செய்த நூதனமான முயற்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக திறந்தவெளியில்…
ஈரான் போரின் தாக்கம் உலக நாடுகளை உலுக்கி வரும் நிலையில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள பாகிஸ்தான் கடும் நெருக்கடியைச் சந்தித்து…
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான துரைமுருகன், இன்று கிளித்தான்பட்டறை பகுதியில் தீவிர…
சூரிய பகவான் மேஷ ராசியில் உச்சம் பெற்றுள்ள இந்த பெயர்ச்சி, மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம் மற்றும் கும்பம்…