“இந்த உலகமே நமக்கு வேண்டாம்”… கேக் வெட்டிக் கொண்டாடிய குடும்பம்… அடுத்த நொடியே முடிந்த வாழ்க்கை…. சென்னையை அதிரவைத்த சம்பவம்….!

Spread the love

சென்னை பெரம்பூரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவியின் துயரத்தைக் கண்டு சகிக்க முடியாமல், குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவெடுத்த தந்தை, தன் மகன் மற்றும் மனைவிக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பூர் சங்கராச்சாரி மடம் பகுதியைச் சேர்ந்த சகாயம் செபாஸ்டின் என்பவரின் மனைவி பியூலா, நீண்ட நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு சிகிச்சைகள் அளித்தும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், ஒட்டுமொத்த குடும்பமும் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளது.

வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியின் உச்சமாக, இந்த உலகத்தை விட்டு அனைவரும் ஒன்றாகச் சென்றுவிடலாம் என செபாஸ்டின் முடிவெடுத்துள்ளார். இதற்காக அவர் திட்டமிட்டு கடைக்குச் சென்று கேக் வாங்கி வந்துள்ளார். தற்கொலைக்கு முன்பாக குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி மகிழ்ச்சியாகக் கொண்டாடிய அவர், யாருக்கும் தெரியாமல் அதில் விஷத்தைக் கலந்துள்ளார். அந்த கேக்கைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே 4 வயது மகன் யுவன் ஹாண்டோ, மனைவி பியூலா மற்றும் 8 வயது மகள் இவாஞ்சலி ஆகியோர் மயங்கி விழுந்துள்ளனர்.

தன் கண் முன்னால் குடும்பத்தினர் மயங்கியதைக் கண்ட செபாஸ்டின், தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதற்கிடையே மயக்கத்தில் இருந்த சிறுமி இவாஞ்சலி, ஒரு கட்டத்தில் கண் விழித்துப் பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்பியம் காவல்துறையினர், நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் செபாஸ்டின் மற்றும் அவரது மகன் யுவன் ஆகிய இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் பியூலா மற்றும் அவரது மகள் இவாஞ்சலி ஆகிய இருவரும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். புற்றுநோய் தந்த வலியால் ஒரு குடும்பமே சிதைந்து போன இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தற்கொலைக்கான முழுமையான பின்னணி குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

ஜி ஜின்பிங் கொடுத்த கிஃப்ட்.. ஏர்போர்ட்டில் நடந்த ட்விஸ்ட்…. சீனாவுக்கு டிரம்ப் கொடுத்த மரண அடி…. உலகமே அதிர்ச்சி…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக சீனாவுக்குச் சென்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கைச்…

6 minutes ago

குதிரையை பலி வாங்கிய கொடிய பாக்டீரியா.. மனிதர்களுக்கும் பரவுமா?… சென்னைக்கு வந்த புதிய ஆபத்து… ஷாக் நியூஸ்…!

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில், குதிரை ஒன்றிற்கு 'கிளாண்டர்ஸ்' (Glanders) எனப்படும் அரிய வகை தொற்று நோய் பாதிப்பு இருப்பது கடந்த…

13 minutes ago

BREAKING: விஜய் அரசின் 9 அமைச்சர்கள் இலாகா ஒதுக்கீடு… சற்றுமுன் வெளியான லிஸ்ட்….!

தமிழகத்தில் புதிதாகப் பதவியேற்றுக்கொண்ட ஒன்பது அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன, இதன் மூலம் புதிய அமைச்சரவை தனது பணிகளை…

23 minutes ago

இருட்டுக்குள் ஆட்டோவை திருப்பிய டிரைவர்… கதறிய 15 வயது சிறுமி… முக்கூடல் அருகே நடந்த அந்த நடுக்கடலில் உறைந்த நிமிடம்…!

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை கடத்திச் சென்று, கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை…

27 minutes ago

இபிஎஸ் போட்ட அந்த ஒரு ‘ரகசிய’ உத்தரவு… பதறிப்போன வேலுமணி தரப்பு… அதிமுகவில் நள்ளிரவு பரபரப்பு…!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் யாரும் எதிர்பாராத பல அதிரடி திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் தேர்தலில் எந்தவொரு…

38 minutes ago

FLASH NEWS: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்… சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு…!

நடப்பு கல்வி ஆண்டில் நடைபெற்று முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்குப் பள்ளிகளில்…

44 minutes ago