விஜய் கட்சியில் இணையும் அதிமுக  அமைச்சர்கள்.. அப்செட்டில் தவெக பாய்ஸ்..! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ..? விஜய் ரசிகர்களின் குமுறல்…!!

Spread the love

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு இடையே, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, அடுத்தடுத்து நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து வருகின்றனர். குறிப்பாக, முன்னாள் எம்.எல்.ஏ-க்களான ஜெயக்குமார், சத்தியபாமா, மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா மற்றும் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் தவெக-வில் இணைந்துள்ளனர். தங்களின் அரசியல் எதிர்காலத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இவர்களின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதிமுகவினர் தொடர்ந்து தவெக-வில் இணைவது, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு மூத்த அரசியல்வாதிகள் உள்ளே வருவதால், அவர்கள் தங்களது ஆதரவாளர்களைக் கொண்டு வந்து கட்சிப் பொறுப்புகளைக் கைப்பற்ற முயல்வார்கள் என்றும், இதன் காரணமாகக் கட்சித் துவங்கியது முதல் விஜய்க்காக உழைத்த தங்களுக்கு வருங்காலத்தில் தேர்தலில் போட்டியிட ‘சீட்’ (வாய்ப்பு) கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சமும், ஏமாற்றமும் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய்யின் ரசிகர் மன்றம், மக்கள் இயக்கம் மற்றும் தவெக-விற்காக அர்ப்பணிப்புடன் உழைத்தவர்களுக்கு மட்டுமே கட்சியில் உரிய அங்கீகாரமும், முன்னுரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று தவெக தொண்டர்கள் கட்சித் தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாகவே மக்கள் தவெக-வை ஆதரித்து வாக்களித்த நிலையில், அதே பழைய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து இணைந்தால் எப்படி உண்மையான அரசியல் மாற்றம் ஏற்படும் என்று விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Swetha

Recent Posts

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்.. 61 வயது மூதாட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை… பயங்கர அதிர்ச்சி..!!

சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING: உடனே மூடுங்க.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

5 மணத்தியாலங்கள் ago

FLASH: அரசு எச்சரிக்கையை மீறி கூடுதல் கட்டணம் வசூல்… டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி கைது..!!

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING: “சிங்கப்பெண் அதிரடிப்படை” திட்டத்தின் தொடக்க விழா ரத்து…!!

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…

5 மணத்தியாலங்கள் ago

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வீதிமன்றப் போராட்டம்..! புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு.. அரசு ஊழியர்கள் சங்கம் கெடு…!!

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…

6 மணத்தியாலங்கள் ago

அரசியலை கடந்த பாசம்..! சீமான் வீட்டுக்கு அண்ணனாகச் சீர் கொண்டு சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்..! நெகிழ வைக்கும் பின்னணி…!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…

6 மணத்தியாலங்கள் ago