உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்கா தற்போது கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வில் வெளிநாட்டு நிறுவனங்கள், மத்திய வங்கிகள் மற்றும் அரசுகள் வைத்துள்ள அமெரிக்க அரசுப் பத்திரங்களின் மதிப்பு 2.68 டிரில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இது கடந்த 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது 13 ஆண்டுகளில் பதிவான மிகக் குறைந்த அளவாகும். கடந்த 2025 மார்ச் மாதத்தில் இருந்து மட்டும் சுமார் 265 பில்லியன் டாலர் முதலீடுகள் அமெரிக்க பத்திர சந்தையில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது ஒட்டுமொத்த முதலீட்டுச் சந்தையிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. எண்ணெய் உற்பத்தி நாடுகள் அனைத்தும் டாலரிலேயே வர்த்தகம் செய்வதால், கச்சா எண்ணெய் விலை உயர்வால் உலக நாடுகளின் உள்நாட்டு நாணய மதிப்பு பலவீனமடையத் தொடங்கியது. இதனால், தங்களது சொந்த நாணய மதிப்பைத் தக்கவைத்துக் கொள்ள உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களின் பாதுகாப்பில் இருந்த அமெரிக்க அரசுப் பத்திரங்களை விற்று, அமெரிக்க டாலர்களைத் திரட்ட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டன. குறிப்பாக, ஈரான் போர் தொடங்கிய கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 120 பில்லியன் டாலர் மதிப்பிலான பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஒருபுறம் பாதுகாப்பான அரசுப் பத்திரங்களை விற்றாலும், மறுபுறம் அமெரிக்கப் பங்குச் சந்தையில், குறிப்பாக எண்ணெய் மற்றும் பாதுகாப்புத் துறைப் பங்குகளில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். இது “பத்திரங்களை விற்று அமெரிக்காவை வாங்குவது” என்ற புதிய போக்கைக் காட்டுகிறது. தற்போதைக்கு அமெரிக்கப் பொருளாதாரம் வலுவாக இருந்தாலும், அதன் அதீத கடன், வட்டிச் சுமை மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் இந்த ஜகா வாங்கும் போக்கு நீண்ட காலத்தில் உலக நிதி அமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்து வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டால், அது ஒட்டுமொத்த பொருளாதாரச் சரிவுக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…
மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…