Connect with us

CINEMA

தொடர்ச்சியாக தோல்வியை சந்திக்கும் சூர்யா, கார்த்தி.. மொத்தமா அடிவாங்கும் சிவக்குமார் குடும்பம்.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..

நடிகர் சிவக்குமார், தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வந்தவர். எம்ஜிஆர் சிவாஜி போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்தவர். நல்ல ஓவியர், சிறந்த பேச்சாளர். சிறந்த நினைவாற்றல் கொண்டவர். அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி இருவருமே தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக இருந்து வருகின்றனர். துவக்கத்தில் மௌனம் பேசியதே, நந்தா, பிதாமகன், சிங்கம், ஏழாம் அறிவு, ஜெய்பீம் என தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்த சூர்யா ஒரு கட்டத்துக்கு பிறகு தோல்வி படங்களாக தந்தார். எதற்கும் துணிந்தவன், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் எடுபடவில்லை. சூரரைப் போற்று படம் மட்டுமே பேசப்பட்டது.

 Japan

   

அதேபோல் கார்த்தி நடித்த படங்களில் குறிப்பிட்ட படங்கள் மட்டுமே பெரிய அளவில் பேசப்பட்டன. சர்தார், கொம்பன், தீரன் அதிகாரம் ஒன்று, சிறுத்தை, அலெக்ஸ் பாண்டியன் போன்ற வெற்றிப்படங்களை தந்த கார்த்திக்கு விருமன் தோல்வியை கொடுத்தது. இப்போது தீபாவளிக்கு வந்த ஜப்பான் படம், மிகப்பெரிய தோல்வி படமாக கார்த்திக்கு அமைந்து விட்டது. இதற்கு காரணம், அவர்களது அரசியல் பேசும் குடும்பம்தான் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

 Japan

அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகள் குறித்து சிவக்குமார் கேள்வி எழுப்பினார். சூர்யா, கார்த்தி இருவரும் கல்வியின் தரம் குறித்தும், அரசியல் சார்ந்த செயல்பாடுகள் குறித்தும் அடிக்கடி கருத்துகளை தெரிவித்து வந்தனர். ஆனால் இப்போது திமுக ஆட்சி வந்த பிறகு, நாட்டில் எந்த குறைகளுமே இல்லாதது போல வாய்மூடி மவுனம் சாதிக்கின்றனர். நாட்டில் பலவிதமான தொழில் சார்ந்த பிரச்னைகள், கொடிய சம்பவங்கள் பல நடந்தும் அதுபற்றி வாயே அவர்கள் திறக்கவில்லை.

இதுமட்டுமின்றி கார்த்தியின் 25வது படம் ஜப்பான் என பயங்கர பில்டப் செய்து விழா நடத்திய நிலையில், ரசிகர்களால் உட்கார முடியாத அளவுக்கு மொக்கை படமாக இருப்பது, ரசிகர்களுக்கு தந்த அதிர்ச்சி பரிசாகவே ஜப்பான் படம் இருக்கிறது. இதற்கு பதிலாக, தோல்வி என்ற தீபாவளி ஸ்பெஷலாக பலமான அடி சிவக்குமார் குடும்பத்துக்கு, ரசிகர்களிடம் இருந்து கிடைத்துவிட்டது.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top