குஜராத் மாநிலம் வதோதரா அருகே உள்ள ஆற்றில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு சிறிய முதலை குட்டி மீன் பிடி வலையில் சிக்கியது. வலை கனமாக இருந்ததைக் கண்டு பெரிய மீன் சிக்கியிருக்கும் என்று நினைத்து வெளியே இழுத்த மீனவர்கள், உள்ளே முதலை குட்டி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஆனால், அந்த முதலைக்கு தீங்கு விளைவிக்க நினைக்காத மீனவர்கள், மனிதாபிமானத்துடன் அதனை மீட்க முடிவு செய்தனர்.
வலைக்குள் சிக்கித் தவித்த முதலையை மிகவும் கவனமாக வெளியே எடுத்த மீனவர்கள், அதற்கு எந்த காயமும் ஏற்படாதவாறு பாதுகாத்தனர். பின்னர் இது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களது முன்னிலையில் அந்த முதலை குட்டி மீண்டும் பாதுகாப்பாக ஆற்றில் விடப்பட்டது. பொதுவாக முதலைகளைக் கண்டாலே அச்சப்படும் சூழலில், மீனவர்களின் இந்தத் துரிதமான மீட்பு நடவடிக்கையும், வன உயிரினங்கள் மீதான அவர்களது அக்கறையும் சமூக வலைதளங்களில் வைரலாகிப் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…
ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…
நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat)…
மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் "மாம்பழத்தில் விஷம்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…
திமுக மாநிலத் துணைச் செயலாளரான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தொண்டர்கள் தன் மீது செருப்பு வீசியதாகக்…