சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி இன்ஸ்டாகிராம் பிரபலம் கவிதை கோபால் மீது நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான அஸ்வினி மேரி (22) என்பவரைத் தொடர்பு கொண்ட கவிதை கோபால், சினிமாவில் நடிக்க வேண்டுமென்றால் சில ‘அட்ஜஸ்ட்மென்ட்கள்’ செய்ய வேண்டும் எனவும், பணம் மற்றும் உடல் ரீதியான ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் ஆபாசமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தனது உறவினருடன் சென்று காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
குறிப்பாக, கவிதை கோபால் தனது வாட்ஸ்அப் முகப்புப் படத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்யின் புகைப்படத்தை பயன்படுத்தி வருவதாகவும், இதுபோன்ற முறையற்ற செயல்களால் தவெக கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதாகவும் அஸ்வினி மேரி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ‘கடல் நீரும் உப்புதான் கண்ணீரும் உப்புதான்’ என்ற கவிதை மூலம் பிரபலமான கவிதை கோபால், சில திரைப்படங்களிலும், ‘நீயா நானா’ விவாத நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பரவலாக அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இளம் பெண் இன்ஸ்டாகிராம் பிரபலத்திற்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக எழுந்துள்ள இந்த புகார் சினிமா மற்றும் சமூக வலைதள வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு சினிமா வாய்ப்புகள் வாங்கித் தருவதாகக் கூறி இதுபோன்று ஏமாற்றும் நபர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. காவல்துறையினர் இந்த புகார் குறித்து தீவிர விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெலங்கானா மாநிலத்தில் 1.5 ஏக்கர் நிலத் தகராறு காரணமாக, தெருவில் நடந்து சென்ற மருமகளை அவரது மாமனாரும் மைத்துனர்களும் சேர்ந்து…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காணாமல் போன பெண் ஒருவர் தைல மரக்காட்டில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்…
அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் கொடூரமான குற்றங்களில் ஒன்றாகக் கருதப்படும் ரோனால்ட் ஜீன் சிம்மன்ஸின் படுகொலைச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக…
ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டா மாவட்டத்திலுள்ள டாஹுவா கிராமத்தில், பெற்றோருக்கு அருகில் உறங்கிக் கொண்டிருந்த 12 வயது சிறுமி நள்ளிரவில் மர்ம…
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே நிலப் பட்டா மாறுதலுக்காக ரூ.1 1/4 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக…
தென்காசி மாவட்டம் செங்கோட்டை வனப்பகுதியை ஒட்டியுள்ள தண்டவாளத்தில் விரைவு ரயில் மோதி புலி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை…