அண்ணன் மனைவியின் கழுத்தை பிடித்து இழுத்து வந்த கொழுந்தன்…. தலையை துண்டித்து கொன்ற மாமனார்… சொத்து தகராறில் கொடூரம்…. குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

Spread the love

தெலங்கானா மாநிலத்தில் 1.5 ஏக்கர் நிலத் தகராறு காரணமாக, தெருவில் நடந்து சென்ற மருமகளை அவரது மாமனாரும் மைத்துனர்களும் சேர்ந்து வீட்டிற்கு இழுத்துச் சென்று கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் மெஹ்பூப் நகர் மாவட்டம் ஓபுலயபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுனிதா (28). இவருக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு பல்ராம் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில், கணவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கிராமப் பெரியவர்கள் முன்னிலையில் 1.5 ஏக்கர் நிலம் சுனிதா பெயரில் எழுதி வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பல்ராமின் சகோதரர்களான பாண்டு நாயக் மற்றும் மான்யா நாயக் ஆகியோருக்குக் சுனிதாவின் மீது கடும் கோபம் இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தன் குழந்தைகளுடன் சிந்தல் தண்டா கிராமத்தில் வசித்து வந்த சுனிதா, வழக்கம் போல் தனது தோட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது மாமனார் மாணிக்ய நாயக், மைத்துனர்கள் மான்யா நாயக், பாண்டு நாயக் மற்றும் பாண்டுவின் மனைவி பார்வதி ஆகியோர் அவரை வழிமறித்துத் தங்கள் வீட்டிற்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் சுனிதாவைக் கத்தியால் தாக்கித் தலையைத் துண்டித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். சுனிதாவின் தந்தை வல்யா நாயக் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள கொலையாளிகளைத் தேடி தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

என் பொண்ணு கூட இருக்கியாடா?… மகளின் காதலனை கதறக் கதற அடித்துக் கொன்ற தந்தை… பெங்களூரில் அரங்கேறிய கோரச் சம்பவம்…!!

பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…

17 minutes ago

ஐயோ கொடுமையே… GST பில் கேட்ட உரிமையாளர் மீது தாக்குதல்… பேக்கரி உரிமையாளரை அடித்து நொறுக்கி… JDS நிர்வாகிகள் வெறியாட்டம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…

28 minutes ago

என்னது… இறந்தவர்கள் சாம்பலை சூப்பில் கலந்து குடிக்கிறார்களா?… அதிர்ச்சியூட்டும் பழங்குடியினர்களின் விசித்திர செயல்… இதன் பின்னணி என்ன?…

தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளில் வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் வாழ்ந்து வரும் யனோமாமி பழங்குடி இன மக்கள், இயற்கை…

37 minutes ago

அடச்சீ… 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த… வேன் ஓட்டுநர் போக்சோவில் கைது… பள்ளியில் நேர்ந்த கொடூரம்…!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…

44 minutes ago

திக்… திக்… குடும்பத் தகராறில் மனைவி கத்தியால் குத்திக் கொலை… போலீசில் சரணடைந்த அதிர்ச்சி பின்னணி…!!

சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (38). இவருக்கும் முத்து பிரியாவுக்கும் (33) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…

55 minutes ago