“பிறந்தநாள் கொண்டாடிய 7 வயது சிறுமி மாயம்”…. காட்டுப்பாதைகளை கரைத்துக் குடித்த ஆடு மேய்ப்பவன்… சிபிசிஐடி வசம் சிக்கிய திடுக்கிடும் ரகசியம்…!

Spread the love

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு – பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா, கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டுத் தூங்கிய நிலையில் மறுநாள் காலையில் திடீரென மாயமானார். சத்தியமங்கலம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில், வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் பொதுமக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தற்போது சிபிசிஐடி போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமி மாயமாகி 22 நாட்களுக்கு மேலான நிலையில், சிறுமியின் பெற்றோரிடம் அரசுப் பள்ளியில் வைத்து விசாரணை நடத்தப்பட்டதோடு, அப்பகுதியில் உள்ள டீக்கடைகள் மற்றும் ஓட்டல்களில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளின் புகைப்படங்களைக் காண்பித்துப் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் அடிதடி வழக்கில் சிறையில் இருந்த சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளியான ராஜதுரையைச் சிறையிலிருந்து அழைத்து வந்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் வைத்து சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்தனர்.

ராஜதுரையிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலமாக அவரது நண்பரான ஆடு மேய்க்கும் அரவிந்த் என்பவரின் தொடர்பு வெளிச்சத்திற்கு வந்தது. அப்பகுதியில் நீண்டகாலமாக ஆடு மேய்த்து வருவதால் காட்டுப்பாதைகளை அறிந்தவரான அரவிந்த்துக்கு, சிறுமி மாயமானது குறித்துக் கூடுதல் தகவல்கள் தெரிந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனையடுத்து, அரவிந்த்தைக் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று சிபிசிஐடி போலீசார் நேற்று முதல் விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று இரண்டாவது நாளாக அவரிடம் துருவித் துருவி விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

12 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

15 minutes ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

41 minutes ago

என் பொண்ணு கூட இருக்கியாடா?… மகளின் காதலனை கதறக் கதற அடித்துக் கொன்ற தந்தை… பெங்களூரில் அரங்கேறிய கோரச் சம்பவம்…!!

பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…

1 மணத்தியாலம் ago

ஐயோ கொடுமையே… GST பில் கேட்ட உரிமையாளர் மீது தாக்குதல்… பேக்கரி உரிமையாளரை அடித்து நொறுக்கி… JDS நிர்வாகிகள் வெறியாட்டம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…

1 மணத்தியாலம் ago