ரூ.100 கோடி மோசடி வழக்கில் பகீர் திருப்பம்…. அரசகுமார் மீது முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் அவுட் ஆஃப் தி பாக்ஸ் அட்டாக்….. வெடிக்கும் வாதங்கள்…!

Spread the love

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அவரை நவம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டிருந்த நிலையில், பின்னர் அவர் 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது பல முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அன்பில் மகேஷ் தரப்பு வாதங்களின்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரம் புதுப்பிப்பது ஊழலுக்கு வழிவகுக்கும் என்ற தனியார் பள்ளிகளின் கோரிக்கையின் அடிப்படையில்தான், தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை பெறப்பட்டு 20 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையில் கூடுதல் செயலாளர்தான் கையெழுத்திட்டாரே தவிர, அன்பில் மகேஷ் அதில் கையெழுத்திடவில்லை என்றும், இது அரசு அதிகாரிகள் கூட்டாக எடுத்த முடிவு என்றும் வாதிடப்பட்டது.

மேலும், அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று அரசகுமார் பொய் சொல்லியே ரூ.100 கோடி வசூலித்துள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டது. அரசகுமார் கூறிய பொய்களுக்கு தாம் எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது என்றும், மேலும் இந்த அரசாணையில் பல்வேறு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதால் பணம் பெற்றுக்கொண்டு சாதகமாகச் செயல்பட்டதாகக் கூறுவதில் நியாயமில்லை என்றும் வாதிடப்பட்டது. இன்றும் இதே அரசாணைதான் நடைமுறையில் தொடர்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், லஞ்சம் கொடுத்தவர்கள் அனைவரும் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு கைது செய்யப்பட வேண்டும் என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது. லஞ்சம் கொடுப்பது குற்றம் என்று தெரிந்தும் அவர்கள் மீதான நடவடிக்கை எ எடுக்கப்படாமல், அவர்கள் சாட்சிகளாக மட்டுமே மாற்றப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய வாதம், அரசு அதிகாரிகள் சதியில் ஈடுபட்டார்களா என்பதை காவல்துறை முறையாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரியது.

மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் 3 நாள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், எந்தவித ஆதாரங்களையும் கலைக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஊழல் வழக்குகளை விசாரிக்கவே பிரத்யேகமாக லஞ்ச ஒழிப்புத்துறை இருக்கும் போது, இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரிப்பது ஏன் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. இத்தகைய பல்வேறு வாதங்களுக்கு மத்தியில் இவ்வழக்கின் அடுத்த கட்ட நகர்வுகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

Nanthini

Recent Posts

‘ஆபரேஷன் டைகர்’… ஊருக்குள் பட்டப்பகலில் 4 புலிகள் உலா… விவசாயி மீது வெறித்தனமான தாக்குதல்… நடுக்கத்தில் கிராம மக்கள்… வைரலாகும் ட்ரோன் காட்சிகள்…!!

கர்நாடக மாநிலம் மைசூரு அருகே உள்ள அகலா கிராமப் பகுதியில், ஒரே இடத்தில் நான்கு புலிகள் நடமாடுவது அங்கு பறக்கவிடப்பட்ட…

19 seconds ago

பழைய பகையா?… கடையில் நடந்தது என்ன?… நடுரோட்டில் பட்டப்பகல் வெறிச்செயல்… 7 பேர் கொண்ட கும்பல் செய்த அதிர்ச்சி காரியம்…!!

குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்திற்குட்பட்ட மஹமதாபாத் - பிதாய் வழித்தடத்தில் இயங்கி வரும் 'கோடல் ஜெனரல் ஹார்டுவேர் அண்ட் பஞ்சர்…

7 minutes ago

“வாயில் கற்கள், மண்ணை திணித்து…” காட்டுப்பாதையில் வந்த காவல் அதிகாரி… கொன்று புதைத்த தந்தை-மகன்… பகீர் பின்னணி…!!!

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் நிலத்தகராறு காரணமாகச் சிறப்பு காவல் அதிகாரி ஒருவர் அவரது சொந்த உறவினர்களாலேயே உயிருடன் புதைத்துக்…

13 minutes ago

திக்.. திக்..! போலிஸ் அலட்சியமா?… . குடும்ப பகையா? திட்டமிட்ட சதியா?… முன்பே எச்சரித்தும் பறிபோன 2 உயிர்கள்… பகீர் பின்னணி…!!

ஹைதராபாத்தில் தீர்க்கப்படாத குடும்பப் பகை காரணமாக இரு பெண்கள் தங்கள் சொந்த உறவினராலேயே கொடூரமாகக் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம்…

14 minutes ago

“துரைமுருகனுக்குப் பின் கனிமொழி?”…. அறிவாலயத்தில் வெடிக்கும் அடுத்த அதிரடி மாற்றம்…. நவ. 15-க்குப் பிறகு திமுகவில் நடக்கப் போகும் மெகா ட்விஸ்ட்……!

திமுகவில் வரவிருக்கும் 5 தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்பாக, கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் அதிரடி மாற்றங்களைச் செய்யத் தலைமை திட்டமிட்டுள்ளதாக அறிவாலய…

15 minutes ago

“நாகையில் சிக்கிய ரூ.300 கோடி போதைப்பொருள்”…. தவெக ஆட்சியில் நடந்த மெகா ஊடுருவல்….. DRI கொடுத்த அதிரடி ரிப்போர்ட்…. ஆதவ் அர்ஜுனை வெளுத்து வாங்கிய முதல்வர் விஜய்…..!

வேதாரண்யம் கடற்பகுதி வழியாக இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்த முயன்றதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் கீழ்வேளூர் தொகுதி பொறுப்பாளர் பூபாலன் வருவாய்ப்…

25 minutes ago