“நாகையில் சிக்கிய ரூ.300 கோடி போதைப்பொருள்”…. தவெக ஆட்சியில் நடந்த மெகா ஊடுருவல்….. DRI கொடுத்த அதிரடி ரிப்போர்ட்…. ஆதவ் அர்ஜுனை வெளுத்து வாங்கிய முதல்வர் விஜய்…..!

Spread the love

வேதாரண்யம் கடற்பகுதி வழியாக இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்த முயன்றதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் கீழ்வேளூர் தொகுதி பொறுப்பாளர் பூபாலன் வருவாய்ப் புலனாய்வுத் துறையினரால் (DRI) கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள 135 கிலோ மெத்தம்பேட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ள இந்த விவகாரம், எதிர்க்கட்சியாக இருந்தபோது போதைப்பொருள் புழக்கத்தைக் கடுமையாக விமர்சித்த தவெக அரசுக்குக் கடுமையான நெருக்கடியைச் சந்தித்துக் கொடுத்துள்ளது.

பூபாலனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இத்துறைசார்ந்த பெரியதொரு நெட்வொர்க் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு வருவாய்ப் புலானாய்வுத்துறை விரிவான அறிக்கையை அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு தரப்பிலிருந்து கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் ஆளுங்கட்சிக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன.

இதனிடையே, சிறு துறைமுகங்கள் வழியாக நடக்கும் கடத்தல்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனரும், புதுச்சேரி எம்.எல்.ஏவுமான சார்லஸ் மார்ட்டின் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியிருப்பது தவெக வட்டாரத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சொந்தக் கட்சியைச் சேர்ந்த அமைச்சரின் மீதான இத்தகைய விமர்சனங்கள் ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து, முதல்வர் விஜய் இதுகுறித்து ஆதவ் அர்ஜுனாவிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த உட்கட்சி பூசலையும், இரட்டைத் தலைவலியையும் சமாளிக்கத் தவெக தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. சார்லஸின் அரசியல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துமாறு ஆதவ் தரப்பு தனது குடும்பத்தினர் மூலமாகத் தூதுவிட்டுள்ள போதிலும், போதைப்பொருள் விவகாரமும் அதைத் தொடர்ந்த அரசியல் சர்ச்சைகளும் தவெக அரசின் நிர்வாகத் திறமை மீது பொதுமக்கள் மத்தியில் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளன.

Nanthini

Recent Posts

பழைய பகையா?… கடையில் நடந்தது என்ன?… நடுரோட்டில் பட்டப்பகல் வெறிச்செயல்… 7 பேர் கொண்ட கும்பல் செய்த அதிர்ச்சி காரியம்…!!

குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்திற்குட்பட்ட மஹமதாபாத் - பிதாய் வழித்தடத்தில் இயங்கி வரும் 'கோடல் ஜெனரல் ஹார்டுவேர் அண்ட் பஞ்சர்…

5 minutes ago

ரூ.100 கோடி மோசடி வழக்கில் பகீர் திருப்பம்…. அரசகுமார் மீது முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் அவுட் ஆஃப் தி பாக்ஸ் அட்டாக்….. வெடிக்கும் வாதங்கள்…!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், திமுக…

6 minutes ago

“வாயில் கற்கள், மண்ணை திணித்து…” காட்டுப்பாதையில் வந்த காவல் அதிகாரி… கொன்று புதைத்த தந்தை-மகன்… பகீர் பின்னணி…!!!

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் நிலத்தகராறு காரணமாகச் சிறப்பு காவல் அதிகாரி ஒருவர் அவரது சொந்த உறவினர்களாலேயே உயிருடன் புதைத்துக்…

12 minutes ago

திக்.. திக்..! போலிஸ் அலட்சியமா?… . குடும்ப பகையா? திட்டமிட்ட சதியா?… முன்பே எச்சரித்தும் பறிபோன 2 உயிர்கள்… பகீர் பின்னணி…!!

ஹைதராபாத்தில் தீர்க்கப்படாத குடும்பப் பகை காரணமாக இரு பெண்கள் தங்கள் சொந்த உறவினராலேயே கொடூரமாகக் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம்…

13 minutes ago

“துரைமுருகனுக்குப் பின் கனிமொழி?”…. அறிவாலயத்தில் வெடிக்கும் அடுத்த அதிரடி மாற்றம்…. நவ. 15-க்குப் பிறகு திமுகவில் நடக்கப் போகும் மெகா ட்விஸ்ட்……!

திமுகவில் வரவிருக்கும் 5 தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்பாக, கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் அதிரடி மாற்றங்களைச் செய்யத் தலைமை திட்டமிட்டுள்ளதாக அறிவாலய…

14 minutes ago

“அப்படியே தூக்கிட்டு ஓடு”… நிற்காமல் பறந்த கார்… போனட்டில் தாயும் மகளும்… கடைசியில் நடந்தது என்ன?… வெளியான அதிரவைக்கும் உண்மை…!!

உத்தரப் பிரதேசத்தின் மதுரா மாவட்டம், பானிகான் கிராமப் பகுதியில் பணப் பரிவர்த்தனை தொடர்பான பழைய பகையின் காரணமாக இரு தரப்பினருக்கு…

25 minutes ago