ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் நிலத்தகராறு காரணமாகச் சிறப்பு காவல் அதிகாரி ஒருவர் அவரது சொந்த உறவினர்களாலேயே உயிருடன் புதைத்துக் கொல்லப்பட்ட திடுக்கிடும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிஷ்த்வார் மாவட்டம் திரிகாம் கிராமத்தைச் சேர்ந்த பஷீர் அகமது (55) என்ற சிறப்பு காவல் அதிகாரி, கடந்த அக்டோபர் 14 அன்று பணி முடித்துவிட்டு காட்டுப்பாதை வழியாக வீடு திரும்பியபோது மர்மமான முறையில் காணாமல் போனார். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, அக்டோபர் 16 அன்று காட்டுப் பகுதியில் உள்ள ஒரு புதரில் அவரது செல்போன் மற்றும் துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டதோடு, புதிதாகத் தோண்டப்பட்ட மண் குழி ஒன்றில் இருந்து அவரது உடலையும் காவல்துறையினர் மீட்டனர்.
காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், பஷீருக்கும் அவரது உறவினரான பஷீர் அகமது தார் என்பவருக்கும் இடையே இருந்த பழைய நிலப்பகையே இந்தக் கொலைக்குக் காரணம் எனத் தெரியவந்தது. பணி முடிந்து தனியாக வந்த பஷீரை, அவரது உறவினர் பஷீர் அகமது தாரும் அவரது மகன் நசீர் அகமது தாரும் தடுத்து நிறுத்தி இரும்புக் கம்பியால் தலையில் தாக்கியுள்ளனர். பின்னர் அவர் சத்தமிட முடியாதபடி வாயில் கற்களையும் மண்ணையும் திணித்து, குழியில் போட்டு உயிருடன் புதைத்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட தந்தை மற்றும் மகனைப் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்திரகிரி தொகுதிக்குட்பட்ட திருப்பதி சாய் நகர் பகுதியில், தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ புலிவர்த்தி நானி போலி வாக்காளர்களைத் திரட்டி…
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே 8-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது பள்ளி மாணவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த 30…
லக்னோவின் தயால் பாரடைஸ் சந்திப்பில் நள்ளிரவு வேளையில் நிகழ்ந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிவேகமாக வந்த…
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள கங்கனானி பகுதியில், கர்மகுண்டிலிருந்து டப்ரானி செல்லும் சாலையில் சென்றுகொண்டிருந்த இன்னோவா கார் ஒன்று திடீரென…
பிஞ்சுக் குழந்தையின் மீது நடத்தப்படும் எத்தகைய வன்முறையும் மனிதநேயத்திற்கே பெரும் இழுக்காகும். தற்காத்துக் கொள்ளத் திராணியற்ற ஒரு சிறு குழந்தையின்…
அஹுவாகாட்லான் பகுதியில் உள்ள பொது இடத்தில் உடல்நலம் குன்றிய நிலையில் காணப்பட்ட பள்ளி மாணவர்கள் மூவரை உள்ளூர் பாதுகாப்புப் படையினர்…