அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் கொடூரமான குற்றங்களில் ஒன்றாகக் கருதப்படும் ரோனால்ட் ஜீன் சிம்மன்ஸின் படுகொலைச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மீண்டும் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
அமெரிக்காவின் அர்கான்சாஸ் மாநிலத்தில் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான ரோனால்ட், 1987-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் தனது சொந்தக் குடும்பத்தினரையே அடியோடு அழிக்கத் திட்டமிட்டார். துப்பாக்கி மற்றும் கயிற்றைப் பயன்படுத்தித் தனது மனைவி, மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகள் என ஒவ்வொருவராகக் கொடூரமாகக் கொன்றார். அதில் அவர் பல வருடங்களாகப் பாலியல் அத்துமீறல் செய்துவந்த அவரது சொந்த மகள் ஷீலா மற்றும் அவருக்குப் பிறந்த 7 வயதுப் பெண் குழந்தையும் அடங்குவர்.
மொத்தம் 14 குடும்ப உறுப்பினர்களைக் கொடூரமாகக் கொன்று வீட்டின் பின்புறத்திலும் கார்களின் டிக்கியிலும் வீசிய அவர், பின்னர் அருகில் உள்ள நகருக்குச் சென்று மேலும் ஒரு பெண்ணைச் சுட்டுக்கொன்றார். விசாரணையின் போது தன் குற்றங்களை ஒப்புக் கொண்ட அவர், “எனக்கு மரண தண்டனையைத் தவிர வேறு எது கொடுத்தாலும் அது கொடுமையான தண்டனை” என்று கூறி, 1990-ல் மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார். பல ஆண்டுகள் கழித்தும் இந்தக் கொடூரத்தின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி அனைவரையும் நடுங்க வைத்து வருகின்றன.
தமிழக முதல்வர் விஜய் சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள தனது இல்லத்தில் இருந்து தினமும் தலைமைச் செயலகத்திற்குச் சென்று வந்தார். சுமார்…
விமானப் பயணத்தின்போது ஏற்படும் காலதாமதம் மற்றும் ரத்து போன்ற சூழல்கள் பயணிகளுக்கு மிகுந்த மன உளைச்சலையும் திட்டமிடல் குளறுபடிகளையும் ஏற்படுத்துவது…
சீனாவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் மல்லாக்க விழுந்து மீண்டும் எழுந்திருக்க முடியாமல் தவித்த ஆமைக்கு, மற்றொரு ஆமை போராடி உதவி…
டெல்லியின் ஜண்டேவாலன் ஈத்கா சாலை பகுதியில் இன்று காலை நிகழ்ந்த ஒரு விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.…
தெலங்கானா மாநிலத்தில் 1.5 ஏக்கர் நிலத் தகராறு காரணமாக, தெருவில் நடந்து சென்ற மருமகளை அவரது மாமனாரும் மைத்துனர்களும் சேர்ந்து…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காணாமல் போன பெண் ஒருவர் தைல மரக்காட்டில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்…