தமிழக முதல்வர் விஜய் சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள தனது இல்லத்தில் இருந்து தினமும் தலைமைச் செயலகத்திற்குச் சென்று வந்தார். சுமார் 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த இடைவெளியைக் கடந்து முதல்வர் பயணிக்கும் போது, பாதுகாப்புப் பணிகளுக்காக வழிநெடுகிலும் ஏராளமான காவலர்கள் நிறுத்தப்பட்டனர். இதனால் அப்பகுதியில் தொடர்ச்சியாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததால், பொதுமக்களின் சிரமத்தைத் தவிர்க்கும் பொருட்டும் தலைமைச் செயலகத்திற்கு விரைவாகச் செல்லும் நோக்கிலும், அதற்கு அருகிலேயே முதல்வர் வீடு பார்க்கத் திட்டமிட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், பசுமை வழிச் சாலையில் (DGS தினகரன் சாலை) பொதிகை வளாகத்தில் அமைந்துள்ள ‘பாமணி’ அரசு விருந்தினர் இல்லத்தை, முதல்வர் தனது முகாம் அலுவலகமாகப் பயன்படுத்த முடிவு செய்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வெறும் 15 நிமிடப் பயணத் தொலைவில் அமைந்துள்ள இந்த பாமணி இல்லம், தற்போது ‘வெற்றி இல்லம்’ என்ற பெயரில் முழு வீச்சில் புதுப்பிக்கப்பட்டது. அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், முதல்வர் விஜய் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதுடன், இன்று முதல் இந்த இல்லத்தில் குடியேற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முக்கிய பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்கள் வசிக்கும் பாதுகாப்பான பகுதியில் இந்த இல்லம் அமைந்துள்ளது. இதற்குக் அருகிலேயே அமைச்சர்கள் ராஜ்மோகன், ராஜேஷ், பர்வேஷ், விக்னேஷ், வினோத் ஆகியோரின் இல்லங்களும் தலைமை நீதிபதியின் இல்லமும் உள்ளன. அமைச்சர்களும் அரசு உயர் அதிகாரிகளும் எளிதாக வந்து செல்லவும், அவசர மற்றும் முக்கியமான ஆலோசனைகளைத் தாமதமின்றி உடனடியாக நடத்தவும் இந்த இடம் மிகவும் ஏதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பாயும் காவிரி ஆற்றின் கிளையான “பாமணி ஆறு” பெயரைக் கொண்டு இந்த இல்லத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லத்தில் முன்னாள் அமைச்சர்களான டிஆர்பி ராஜா, தளவாய் சுந்தரம் மற்றும் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் உள்ளிட்ட பலர் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2004-ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட நாசாவின் புகழ்பெற்ற 'ஸ்விப்ட் அப்சர்வேட்டர்' (Swift Observatory) செயற்கைக்கோள், தனது 22 ஆண்டுகால…
டெல்லியில் பிரபல டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான இளம்பெண் ஒருவரால் இளைஞர் ஒருவர் மிரட்டப்பட்டு பெருந்தொகை பறிக்கப்பட்ட மோசடிச் சம்பவம்…
புதிய திரைப்படங்கள் வெளியாகும் நாட்களில் அதிகாலை 6 மணி முதல் நாளொன்றுக்கு ஆறு காட்சிகள் வரை திரையிட அனுமதி அளித்துள்ள…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7…
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியில், நீண்ட நாட்களாகப் பழகி வந்த காதலியை வாலிபர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்த…
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் தமிழக முதல்வர் விஜய் நேரில் கலந்துகொள்ளாதது, தவெக கட்சியில் புதிய அரசியல் திருப்பங்களை…