“அதிகாலை 6 மணிக்கு தியேட்டரா…?” வாழ்க்கை என்ன படமா…? உங்க மாற்றம் இதுதானா… முதல்வர் விஜய்க்கு சீமான் கிடுக்கிப்பிடி கேள்வி…!!

Spread the love

புதிய திரைப்படங்கள் வெளியாகும் நாட்களில் அதிகாலை 6 மணி முதல் நாளொன்றுக்கு ஆறு காட்சிகள் வரை திரையிட அனுமதி அளித்துள்ள தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு நாட்டின் மக்களை அறிவிலும் ஆற்றலிலும் சிறந்தவர்களாக உருவாக்க வேண்டிய அரசு, அதிகாலையிலேயே அவர்களைத் திரையரங்குகளுக்கு அழைப்பதை முதன்மையான சாதனையாகக் கருதுவது வெட்கக்கேடானது” எனச் சாடியுள்ளார். திரைப்படம் என்பது மனித வாழ்வின் ஒரு பகுதிதானே தவிர, மனித வாழ்வே திரைப்படம் அல்ல என்றும், பொழுதுபோக்கு என்பது ஓய்வுதானே தவிர அதுவே வாழ்க்கையாகிவிடக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “காலை எழுந்தவுடன் படிப்பு என்று பாடினான் நம் பாட்டன் பாரதி, ஆனால் இன்றைய ஆட்சியாளர்களோ காலையில் எழுந்தவுடன் திரைப்படம் பார்க்கச் சொல்கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டின் இளைய தலைமுறைக்குத் தவெக அரசின் வழிகாட்டுதலா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இளைஞர்களை நல்வழிப்படுத்துவதை விடுத்து, பொழுதுபோக்குக்கும் மதுவுக்கும் முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வளர்ந்திருக்கிறது எனக் கேள்வி எழுப்பிய சீமான், அரசு உடனடியாக இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Devi Ramu

Recent Posts

அவர் கிறிஸ்தவர்… டைரியை எரித்த அம்மா… வீட்டில் கிளம்பிய எதிர்ப்பு குறித்து… ஓபனாக பேசிய கீர்த்தி சுரேஷ்… இணையத்தில் வைரல்…!

நடிகை கீர்த்தி சுரேஷ் தொழிலதிபர் ஆண்டனி தட்டிலுடனான தனது 15 ஆண்டு கால காதல் மற்றும் திருமணம் குறித்து சுவாரஸ்யமான…

4 minutes ago

சாதி ஓட்டு எனக்கு தீட்டுன்னு சொன்னாரே தம்பி?… அம்பாசமுத்திரத்தில் சாதி கணக்கு போட்டு களமிறங்கும் சீமான்… தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு…!!

2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், அதிமுகவிலிருந்து விலகிய இசக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயக்குமார், எம்.ஆர். விஜயபாஸ்கர்…

22 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… சீட் இல்லனு CNG சிலிண்டர் மீது… அமர வைக்கப்பட்ட பள்ளி குழந்தைகள்… இணையத்தை அதிரவைத்த அதிர்ச்சி வீடியோ… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சஹர் மாவட்டத்தில் உள்ள சாஹ்ரா பகுதியில் 'தி சயின்ஸ் ஸ்கூல்' என்ற பள்ளியைச் சேர்ந்த சிறுவர்கள்…

37 minutes ago

நண்பர்களிடையே திடீர் மோதல்… அடித்து கொல்லப்பட்ட வாலிபர்… சரக்கு பார்ட்டியில் வெடித்த மோதல்… கொலையாளியை வளைத்து பிடித்த போலீஸ்…!!

குவஹாத்தி நரேங்கிப் பகுதியிலுள்ள சாந்தி நகரில், கடுமையான மதுபோதையில் இருந்த கோலக் ரபா மற்றும் பிரஞ்சித் கலிதா ஆகிய இரண்டு…

54 minutes ago

பக்தர்கள் ஷாக்…. தங்க ரிஷப வாகனத்தின் மீது செருப்போடு ஏறிய தீயணைப்பு வீரர்கள்…. திருவண்ணாமலை கோயிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோயிலின் 9 கோபுரங்களைச் சுத்தம் செய்யும் பணி கடந்த நவம்பர்…

54 minutes ago