ரூ. 11,400 டெல்லி பிளைட் VS ரூ.500 சென்னை ஆட்டோ…. பகீர் கிளப்பும் கிலோமீட்டர் கணக்கு…. விமான கட்டணத்தையே தூக்கி சாப்பிட்ட சென்னை ஆட்டோ ஃபேர்…!

Spread the love

சென்னை என்றாலே மெரினா கடற்கரை, ஃபில்டர் காபி, தியாகராய நகர் ஷாப்பிங் போன்ற பல பெருமைகள் நினைவுக்கு வந்தாலும், அதே அளவுக்கு ஊரறிந்த மற்றொரு விஷயம் இங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்களின் முறைசாரா கட்டண வசூல்தான். வெளியூர்வாசியாக இருந்தாலும் சரி, பல ஆண்டுகளாக வசசிக்கும் உள்ளூர்வாசியாக இருந்தாலும் சரி, “அங்கெல்லாம் வர மாட்டேன்”, “ரிட்டர்ன் சவாரி கிடைக்காது, ரூ.200 எக்ஸ்ட்ரா கொடுங்க” என்ற பதிலை கேட்காத சென்னவாசியே இருக்க முடியாது. சமீபகாலமாக சமூக வலைதளங்களிலும் டீக்கடை பெஞ்சுகளிலும் ஒரு விசித்திரமான ஒப்பீட்டுக் கணக்கு வைரலாகி வருகிறது. அதாவது, சென்னையில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு ஆட்டோவுக்குக் கொடுக்கும் கட்டணமானது, வானத்தில் பறக்கும் அதிநவீன விமானத்தின் ஒரு கிலோமீட்டர் கட்டணத்தை விடப் பல மடங்கு அதிகம் என்பதுதான் அது.

சென்னையிலிருந்து டெல்லிக்குச் செல்லும் ஒரு விமானத்தின் டிக்கெட் கட்டணம் சராசரியாக ரூ.11,400 என்றும், வான்வழித் தூரம் சுமார் 1,761 கி.மீ என்றும் கணக்கிட்டால், விமானத்தில் ஒரு கிலோமீட்டருக்கு நாம் கொடுக்கும் தொகை தோராயமாக ரூ.6.50 மட்டுமே. ஆனால், சென்னையில் கோயம்பேட்டிலிருந்து திருவான்மியூருக்கோ அல்லது சென்ட்ரலில் இருந்து தாம்பரத்திற்கோ செல்லும் 16 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆட்டோ ஓட்டுநர்கள் சாதாரணமாக ரூ.500 கேட்கிறார்கள். இதைக் கணக்கிட்டால், ஆட்டோவில் ஒரு கிலோமீட்டருக்கு நாம் தரும் கட்டணம் சரியாக ரூ.31.20! ஏசி வசதியுடன் 800 கி.மீ வேகத்தில் பறக்கும் விமானத்தை விட, சென்னையில் தூசியும் புகையும் வாங்கிக்கொண்டு டிராஃபிக்கில் ஊர்ந்து செல்லும் ஆட்டோ கட்டணம் சுமார் ஐந்து மடங்கு அதிகம் என்பது அப்பட்டமான உண்மை.

குறுகிய தூரப் பயணங்களில்தான் இந்த அநீதி இன்னும் அதிகமாக நடக்கிறது. வெறும் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.150 முதல் ரூ.200 வரை சர்வ சாதாரணமாகக் கேட்கிறார்கள். தமிழக அரசு சமீபத்தில் குறைந்தபட்சக் கட்டணமாக 1.8 கி.மீ-க்கு ரூ.50 என்றும், அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கு ரூ.25 என்றும் திருத்தி அமைத்தாலும், கள நிலவரத்தில் எந்த ஆட்டோவிலும் மீட்டர் ஓடுவதில்லை. மும்பை போன்ற நகரங்களில் மீட்டர் போடாவிட்டால் மக்கள் ஏறுவதும் இல்லை, காவல்துறையும் சும்மா இருப்பதில்லை. ஆனால் சென்னையில் மீட்டர் என்பது வெறும் அலங்காரப் பொருளாகவே உள்ளது. பெட்ரோல் விலை உயர்வு, காலியாகத் திரும்பும் சூழ்நிலை என ஓட்டுநர்கள் காரணங்களை அடுக்கினாலும், அது உழைக்கும் நடுத்தர மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதாக இல்லை.

செயலி வழி புக் செய்தாலும் கூடுதல் பணம் கேட்பது, சில நேரங்களில் ஆட்டோ கட்டணத்தை விட ஏசி கார் கட்டணம் குறைவாக இருப்பது போன்ற சூழல்களால் பொதுமக்கள் தற்போது மெட்ரோ, மின்சார ரயில்கள் மற்றும் பைக் டாக்ஸிகளை நோக்கி மாறத் தொடங்கிவிட்டனர். சென்னையின் ‘கடைசி மைல்’ போக்குவரத்திற்கு ஆட்டோக்கள் மிக முக்கியமானவை என்பதால், அரசு வெறும் கட்டண உயர்வு அரசாணையோடு நின்றுவிடாமல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். கேரளா போன்ற மாநிலங்களைப் போல அரசு தரப்பிலேயே பொதுவான ஆட்டோ செயலி அமைப்பது, டிஜிட்டல் மீட்டர்களைக் கட்டாயமாக்குவது மற்றும் புகார் ஹெல்ப்லைன் எண்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலமே “விமானத்தை விட ஆட்டோ கட்டணம் அதிகம்” என்ற இந்த அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

Nanthini

Recent Posts

ஐயோ… என்ன கொடுமை இது?… சீட் இல்லனு CNG சிலிண்டர் மீது… அமர வைக்கப்பட்ட பள்ளி குழந்தைகள்… இணையத்தை அதிரவைத்த அதிர்ச்சி வீடியோ… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சஹர் மாவட்டத்தில் உள்ள சாஹ்ரா பகுதியில் 'தி சயின்ஸ் ஸ்கூல்' என்ற பள்ளியைச் சேர்ந்த சிறுவர்கள்…

5 minutes ago

நண்பர்களிடையே திடீர் மோதல்… அடித்து கொல்லப்பட்ட வாலிபர்… சரக்கு பார்ட்டியில் வெடித்த மோதல்… கொலையாளியை வளைத்து பிடித்த போலீஸ்…!!

குவஹாத்தி நரேங்கிப் பகுதியிலுள்ள சாந்தி நகரில், கடுமையான மதுபோதையில் இருந்த கோலக் ரபா மற்றும் பிரஞ்சித் கலிதா ஆகிய இரண்டு…

22 minutes ago

பக்தர்கள் ஷாக்…. தங்க ரிஷப வாகனத்தின் மீது செருப்போடு ஏறிய தீயணைப்பு வீரர்கள்…. திருவண்ணாமலை கோயிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோயிலின் 9 கோபுரங்களைச் சுத்தம் செய்யும் பணி கடந்த நவம்பர்…

22 minutes ago

நாசாவின் திட்டம் படுதோல்வி…. சரியாக 7:39 மணி…. விண்ணிலிருந்து விழுந்த 1,500 கிலோ எடையுள்ள எமன்கூண்டு…. கோடிக்கணக்கான மக்கள் உயிர் தப்பிய அதிர்ச்சி பின்னணி….!

கடந்த 2004-ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட நாசாவின் புகழ்பெற்ற 'ஸ்விப்ட் அப்சர்வேட்டர்' (Swift Observatory) செயற்கைக்கோள், தனது 22 ஆண்டுகால…

28 minutes ago

“வா நேர்ல பாக்கலாம்”… ரூ.26,000 காபி பில்… அழகிய பெண்ணை நம்பிப் போன இளைஞர்… தப்பியோடிய மாயப்பெண்… கஃபேவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லியில் பிரபல டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான இளம்பெண் ஒருவரால் இளைஞர் ஒருவர் மிரட்டப்பட்டு பெருந்தொகை பறிக்கப்பட்ட மோசடிச் சம்பவம்…

32 minutes ago

“அதிகாலை 6 மணிக்கு தியேட்டரா…?” வாழ்க்கை என்ன படமா…? உங்க மாற்றம் இதுதானா… முதல்வர் விஜய்க்கு சீமான் கிடுக்கிப்பிடி கேள்வி…!!

புதிய திரைப்படங்கள் வெளியாகும் நாட்களில் அதிகாலை 6 மணி முதல் நாளொன்றுக்கு ஆறு காட்சிகள் வரை திரையிட அனுமதி அளித்துள்ள…

36 minutes ago