ஆப்பிரிக்க நாடான காம்பியாவில், சிறுமிகள் மற்றும் பெண்களின் பாலியல் ஆசையைக் குறைப்பதாகக் கூறி அவர்களின் பிறப்புறுப்பைச் சிதைக்கும் (FGM) கொடூரமான சடங்கு முறை பல காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. 2024-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட இந்தத் தடைக்கு எதிராக, அங்குள்ள சில மதத் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து, இது கலாச்சார மற்றும் மத சுதந்திரத்திற்கான உரிமையை மீறுகிறது என வாதிட்டு உச்ச நீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் சுமார் 23 கோடிக்கும் அதிகமான பெண்கள் இந்த பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 63 சதவீதம் பேர் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் ஆவர். காம்பியாவில் 5 வயதுக்குட்பட்ட பல சிறுமிகள் இந்த கொடூரத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். இந்தச் சிதைப்பினால் கடுமையான இரத்தப்போக்கு, தொற்று, மலட்டுத்தன்மை மற்றும் பிரசவக் கால சிக்கல்களுடன் மரணமும் கூட ஏற்படலாம் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இருப்பினும், இந்த தீங்கு விளைவிக்கும் பழக்கத்தை ஒழிப்பதில் தற்போதைய அரசு உறுதியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், இந்தத் தடையை நீக்கக் கோரிய மதவாதிகளின் அறிக்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் 35-க்கு 17 என்ற வாக்கு வித்தியாசத்தில் சட்டமியற்றுபவர்கள் தடையை நீக்க மறுத்து பெண்களுக்கான உரிமையை நிலைநாட்டியுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த பிரபல பங்குச்சந்தை ஆலோசகரும் தொழிலதிபருமான பி.ஆர். சுந்தர் மீது பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் காவல் நிலையத்தில்…
தமிழக அரசு ஊழியர்களின் மருத்துவ நலனைப் பாதுகாக்கும் பொருட்டு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக ரூ.838 கோடி நிதி ஒதுக்கீடு…
பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…
மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…